பக்கம்:பொன் நாணயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்விதம் சில வருஷங்கள் சென்றன. பிறகு என் எசமானர் சில நாள் நோயினால் வருந்தினார். அவருக்கு மனைவி, மக்கள் ஒருவரும் இல்லை. ஆதலால் நானும் என் மனைவியுமே அவரை அன்புடன் பாதுகாத்து வந்தோம்.

என் எசமானருக்கு என்மீது "நாளுக்கு நாள் அன்பு அதிகரித்து வந்தது. ஆதலால் அவர், தம்முடைய ஆஸ்தியில் பெரும் பாகத்தை எனக்கே எழுதி வைத்துவிட்டார். பிள்ளைகளே, நான் வசிக்கும் இவ்வீடும் மற்றுமுள்ள நிலம், தோட்டம் முதலியவைகளும் அவருக்குச் சொந்தமானவைகளே.’’

இவ்விதம் குப்புசாமிப் பிள்ளை தம் கதையைச் சொல்லி முடித்தார்.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/47&oldid=1315860" இலிருந்து மீள்விக்கப்பட்டது