இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்போது, அந்தக் கிழவர் ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தார். ஆதலால் அச்சிறுவர்கள் சிறிது நேரம் சும்மா இருந்தார்கள்; பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள்:
“தாதா—எதோ யோசிக்கிறார்,” என்றான் ஒரு சிறுவன்.
“ஆம்; அவர் நமக்குக் கதை சொல்லவே யோசித்துக் கொண்டு இருக்கிறார்,” என்றான் மற்றொரு சிறுவன்.
அக்கிழவர் அப்போதும் பேசாமலே இருந்தார்; பிறகு பெரு மூச்சு விட்டுக்கொண்டு, “ஆ! நான் சிறு வயதில் என்ன பாடு பட்டேன்!” என்றார்.
“தாதா - தாதா, அது என்ன? அதை எங்களுக்குச் சொல்லுங்கள்,”
5