உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு மக்களுக்கு எடுத்துக்கூற - உண்மை வேண்டும். பேச- முன்வர மாகாண சர்க்காரின் திட்டங்களைப் புது அரசியல் திட்டம் எவ்வளவு எளிதாக உடைத் தெறிகிறது என் பதை விளக்கவேண்டும். டில்லியின் ஆதிபத்யத்தையும், அதனுடன். தொடர்பும் பங்கும் கொண்ட, அல்லாடி போன்றாரின் ஆதிபத்யத்தையும் வெட்கமின்றி, விளக்கியாக வேண்டும். மாகாண சர்க்கார் ஒரு பஞ்சாயத்து போர்டுக்குச் சமமாகவே இருந்து வருகிறது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டும். மாகாணத்தின் மாண்புக்காக, மக்களின் எதிர் காலத்துக்காக, வகுப்பு நீதிக்காக எவ்வளவு கஷ்ட நஷ்டம் ஏற்கவும் தயார், என்பதை டெல்லி உணரும் படி செய்யவேண்டும். பதவியை உதறித்தள்ளும் துணிவு ஏற்பட வேண்டும் -இந்த அமைச்சர்களுக்கு. இவர்களிடம் நாடு, இவ்வளவும் திர்பார்க்கிறது-தன் மானத்தை இழக்காதிருக்கவேண் டும் என்று கூறுகிறது. என்ன செய்யப் போகிறார்கள்? வெற்றி பெற்றவளுக்கு ஒரு வார்த்தை ! இந்த வெற்றி, இனிப்பாகத்தான் இருக்கும் - துவக்கத்தில் ஆனால் இதன் முழு விளைவுகள் பிறகே தெரியும்.

16


16