உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு வெற்றி பெற்றோம் என்று இன்று பூரிக்கும் வகுப்பின் இருக்கும் நல்லதல்ல. வெற்றி பெற்றோம், என்று வீறாப்புப் பேசிக் கொண்டு, அந்தச் சிறுபான்மைச் சமூகத்திலே உள்ள சுயநலமிகள் உலவிடுவது காணும்போது, புள்ளிமானைக் கொன்று தின்றுவிட்டு, இரத்தம் வாயில் சொட்டச் சொட்ட புதரருகே உலவும் புலியின் கவனம்தானே வரும், உள்ளது. ஒரு கம்பு-- இருவர் கேட்கின்றனர். எனக்கு, உனக்கு என்று -ஒருவன் கரடுமுரடான பாதை யிலே,கடும் வெயில் வேளையிலே, பாரமான சாமானைச் சுமந்து வந்ததால், களைத்துக் கால் கடுத்துப் போய். ஊன்றுகோல் கிடைத்தாலொழிய நடந்து செல்ல முடி யாத நிலையில் உள்ளவன்-- மற்றவனோ, உல்லாச நடை நடக்கும்போது, அந்தக் கம்பு, தன்னிடம் இருந்தால் அலங்காரமாக, அந்தஸ்தாக இருக்கும் என்ற எண்ணத் துடன் இருப்பவன் -- இருவரில், 'கம்பு யாருக்குத் தரப் படவேண்டும்? காசநோய் - மருத்துவர் தந்திருக்கிறார் சூரணம்- சாப்பிட்டால்தான் வேதனை தீரும் சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டாக வேண்டும்- தேன் கேட்கிறான், அந்த நோயாளி - தேவாலயத்திலே தரப் பட்ட கனியைக் கையில் வைத்துக் கொண்டு, இதைத் தேனில் தோய்த்துச் சாப்பிட விருப்பம், ஆகவே, தேன் எனக்குத் தருக, என்று கேட்கிறான். வாழ்வின் சுவை

18


18