உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு மனம் கலங்கி, மாபெரும் தலைவர்கள், சிந்தித்துச் சிந்தித்து, வீழ்ச்சியுற்ற சமூகத்தை எழுச்சிபெறச் செய் யும் அரியதோர் திட்டத்தைத் தீட்டினர் - நாட்டிலே நடைமுறையிலே அது கொண்டு வரப்பட்டு, கோரிய பலனைக் கொடுத்தவண்ணம் இருந்தது. அந்தத் திட்டம் தகர்க்கப்பட்டுவிட்டது. கம்யூனல் ஜி.ஓ வகுப்புவாரி முறை புதிய இந்திய அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாது என் று இரு மாணவர் சார்பாக, அரசியல் சட்டத்தைத் தீட்டியவர் களில் முன்னணியினராக இருந்த அல்லாடி கிருஷ்ண சாமி ஐயரும்,வி.வி.சீனுவாச ஐயங்கார் எனும் வக்கீ லும் நடத்திய வழக்கிலே, சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதிகள், தீர்ப்பளித்துவிட்டனர். கம்யூனல் ஜி.ஓ.-சென்னை மாகாணத்துச் சமூக் அமைப்பைக் கவனித்து இங்கு சமூக தி வழங்கப்படு வதற்காக வகுக்கப்பட்ட புதிய இந்திய வெளியேறினதால் திட்டம், வெள்ளையன் பீடத்தமர்ந்த காங்கிரஸ் சர் வாதிகாரிகள் தீட்டிய சட்டம்- டெல்லியில். அந்த டெல்லி சட்டத்தின்படி சென்னை சர்க்காரின் திட்டம், சட்ட விரோதமானது என்று தீர்மானிக்கப் ட்டுவிட்டது. நீதிபதிகள் மூலர்-- முதல்வர், ராஜமன்னார் மற்றவர், விசுவநாத சாஸ்திரியார், சோமசுந்தரம் ஆகியோராவர்.


6