பக்கம்:பொன் விலங்கு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


கருங்காலி மரங்களை அறுத்து மிக அழகிய தரமான நாற்காலி மேஜைகள் நிலைக் கண்ணாடி பதித்த பீரோக்கள் ஆகியவற்றைச் செய்யும் மரத் தொழிற்சாலை ஒன்றும், ரப்பர்த்தோட்டம், ஏலக்காய்த் தோட்டம் ஆகியவற்றை ஒட்டி அவற்றுக்காக அமைந்த சில தொழிற்சாலைகளுமாக இருந்தன. பூபதி தம்முடைய சிந்தனையாலும், வியாபாரத் திறமையாலும் அந்த மலைகளில் அற்புதமான பல சாதனைகளைச் சாதித்திருந்தார். ஆனால் இந்தத் தொழில் நிறுவனங்களையெல்லாம் ஆக்கிப் படைத்து ஆளுவதைவிட மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியை நிறுவியவராகவும், நிர்வாகியாகவும் இருப்பதற்காகவே அவர் அதிகமாகப் பெருமைப்பட்டார். நாளடைவில் அந்தக் கல்லூரியை ஒரு மலைநாட்டுப் பல்கலைக்கழகமாக்கிவிடவேண்டும் என்பதையேதம் வாழ்வில் இனிமேல் சாதிக்க வேண்டிய பெரிய சாதனையாக நினைத்துக்கொண்டிருந்தார் அவர். மல்லிகைப்பந்தலுக்கு மிக அருகேயுள்ள அமைதியான இடமாகிய மயிலாடும் பாறைக்குப் போனாலும் சரி, பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள வேறோர் இடத்துக்குப் போனாலும் சரி, அப்பாவின் நினைவும் திட்டங்களும் கல்லூரியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்பது பாரதிக்குத் தெரியும். உடல் நலம் குன்றியிருந்தபோது கல்லூரிக்கான இண்டர்வ்யூக்களைத் தேதி மாற்றவோ, தள்ளிப்போடவோ விரும்பாமல் குறித்த தேதியில் குறித்தபடியே நடத்தி முடித்த தந்தையின் பிடிவாதத்தை அவளும் பார்த்துக்கொண்டுதானே இருந்தாள் நோயுற்றுத் தளர்ந்து போயிருக்கிற பல வேளைகளில் காரியங்களைத் தள்ளிப் போடாமல் குறித்த வேளையில் செய்து முடிக்கும் திருப்தியே அவருடைய நோய்க்கு மருந்தாகியிருப்பதை அவள் அறிவாள். காரியங்களைத் திட்டமிட்டபடி திட்டமிட்ட வேளையில் செய்து முடித்துவிட்டோம் என்ற மனநிறைவையே ஓர் ஆரோக்கியமாக ஏற்றுக்கொண்டு அதனாலேயே எல்லாத் தளர்ச்சிகளும், எல்லாச் சோர்வுகளும் நீங்கி எழுந்து நடமாடத் தொடங்கியிருக்கிறார் அவள் தந்தை, கடந்த நாலைந்து நாட்களாக உடல் நலக் குறையோடு குறைவாக எழுந்து உட்கார்ந்து இண்டர்வ்யூக்களை நடத்தி முடித்த திருப்தியினால் தான் இன்று விடிந்ததும் விடியாததுமாய் எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போகிற

பொ. வி - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/115&oldid=1356210" இலிருந்து மீள்விக்கப்பட்டது