பக்கம்:பொன் விலங்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பொன் விலங்கு

பிடித்த ஞாபகம் வந்தது அவளுக்கு அதற்கும் முந்திய மற்றொரு ஞாபகமாக பூரீவில்லிப்புத்துர்க் கோவில் திருவாடிப் பூரத் திருவிழாவில் தேர் அன்றைக்கு இரவு இதே பாசுரத்தைப் பாடி ஆண்டாளின் கால்கள் மிதித்து நடந்த புண்ணிய பூமியிலே ஆண்டாளுக்கு முன்பாகவே ஆண்டாள் வேடமிட்டு ஆடிய நினைவும் அவளுக்கு இப்போது உண்டாயிற்று. 'மனிதனுக்குப் பயன்படுவதற்காக என் வாழ்வைப் பேரம் பேசினால் நான் வாழவே மாட்டேன்' என்று பொருள்படும் அந்த அழகிய பாசுரத்தை இரைந்து பாடிக்கொண்டே உயிரை விட்டுவிட வேண்டும் போல் மோகினி தன் வாழ்க்கையை ஒரு சுமையாகவும், கனமாகவும் தனக்குத்தானே பலமுறை உணர்ந்திருக்கிறாள். மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன்' என்ற பாசுரத்துக்கு அபிநயம் பிடித்துக் கொண்டே மானிடர்களைக் கவர்ந்து காசு சேர்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்கும், தன் அந்தரத்துக்கும் எட்டு ஏணி வைத்தாலும் எட்டாது என்று அவள் உணர்ந்துதான் இருந்தாள். வாழ்வதற்கு ஏதோ ஒர் உயர்ந்த நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டுமென்று அவள் எண்ணி எண்ணிப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். வாழ்வதற்கு ஒரே நோக்கமும் ஒரே அர்த்தமும் பொருள் சேர்ப்பதுதான் என்று அவளுடைய பேராசை பிடித்த அம்மா அவளிடம் வற்புறுத்துகிறாள். 'என்னுடைய இதயத்தின் இருட்டு - என்றைக்கு விடியப் போகிறதோ என்று அவள் ஈரம் கசிந்திருந்ததன் கண்களைத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விடவும், 'இதுதான் அந்தப் பையன் சத்தியமூர்த்தியின் வீடு இறங்கி வா...அவனைக் கூப்பிட்டுப் பேனாவைக் கொடுத்துவிட்டுப் போகலாம்" என்று கண்ணாயிரம் காரை நிறுத்திக் கீழே இறங்கி மோகினி இறங்குவதற்காகப் பின்புறம் வந்து கதவைத் திறந்து விடவும் சரியாக இருந்தது. பயல், அவன், இவன் என்று ஆளில்லாத போது பேசிவிட்டாலும் சத்தியமூர்த்தியிடம் கண்ணாயிரத்துக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது என்பதை "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?'-என்று அவர் மரியாதையாக விசாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டாள் மோகினி. சத்தியமூர்த்தியிடம் பேனாவைக் கொடுத்துவிட்டுச் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தபின், 'என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விடைபெற்றபோது சத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/128&oldid=595053" இலிருந்து மீள்விக்கப்பட்டது