பக்கம்:பொன் விலங்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米 நாம் எப்படி எங்கே வாழ விரும்பு கிறோம் என்பதும் உலகம் நம்மை எங்கே எப்படி வாழ வேண்டுமென்று எதிர் பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்,

米 தனக்கு வந்திருக்கிற கடிதம் கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகிகளிடமிருந்தோதான் வந்திருக்கவேண்டுமென்று தன் தந்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தவிப்பது சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. அப்பா மட்டுமில்லை, அம்மாவும் இப்படி எதிர்பார்த்துத்தான் தவிக்கிறாள். பிறரை எதிர்பார்த்துத் தவிக்க வைத்துவிட்டு வாழ்வதிலுள்ள வேதனையை அந்த விநாடியில் சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்தான். இதைக் காட்டிலும் அதிகமாக அவன் மனத்தை வேதனைப்படுத்தக் கூடிய வேறு செய்தி ஒன்றைத் தந்தை அப்போது அவனிடம் கூறினார்.

'முடிந்தால் இன்றைக்குச் சாயங்காலமாவது நாளைக்குக் காலையிலாவது கண்ணாயிரத்தைப் போய்ப் பார். நான் அவரிடம் நேற்றுப் பேசிக்கொண்டிருந்தபோது உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சுற்று வட்டாரத்தில் கண்ணாயிரம் மனம் வைத்தால் சாதிக்க முடியாத காரியமில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி உனக்கே நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. கண்ணாயிரம் யாரிடமாவது வேண்டியவர்கள் மூலம் சொல்லி உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியும். ஞாபகத்தில் வைத்துக்கொள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு நமக்கு என்றைக்கும் வேண்டும்."

யாருடைய சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் போலி யானதென்றும் பொய்யானதென்றும் எண்ணியெண்ணி அவன் வருத்தப்பட்டிருக்கிறானோ அவரிடமே அவனைப் போய் நிற்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/134&oldid=595067" இலிருந்து மீள்விக்கப்பட்டது