பக்கம்:பொன் விலங்கு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - பொன் விலங்கு

சிரிப்பையும், வேதனையையும் ஒருங்கே உண்டாக்கக்கூடியதொரு சம்பவத்தை முன்னிட்டுக் கூடிய கூட்டமாயிருந்தது அது. கூடியிருந்தவர்கள் அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூட நடக்குமா?" என்று நினைத்து நினைத்து வியப்படையக் கூடியதாயிருந்தது அந்தச் சம்பவம். -

கூடியிருந்த கூட்டத்தின் நடுவே கிழிந்த சேலையும் பயந்து கலவரமடைந்த முகத்தோற்றமுமாக இளம் வயதுப் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி கூசிப் போய்க் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு மிக அருகே தரையில் ஒரு புது மண் பானை சில்லுச் சில்லாக உடைந்து கிடந்தது. அந்த ஆலமரத்தடியைக் கடந்து நாலைந்து முறை நடந்துபோகிற எவருடைய பார்வையிலிருந்தும் அந்தப் பிச்சைக்காரப் பெண் தப்பியிருக்க மாட்டாள். சத்திய மூர்த்தியே அவளை அந்த இடத்தில் பலமுறை பார்த்திருக்கிறான். 'ஐயா பிள்ளைத்தாச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க, ஐயா... உங்க தலைமுறைக்கு நீங்க நல்லா இருப்பீங்க" என்று கனத்து முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தாய்மை கனிந்த வயிற்றோடு அவள் அந்தத் திருப்பத்தில் வெயிலென்றும், மழையென்றும் பாராமல் பிச்சைக்கு நிற்பதைப் பார்த்து சத்தியமூர்த்தி பரிதாபப்பட்டிருக்கிறான். 'வயிறும் பிள்ளையுமாகக் கர்ப்பிணியாயிருக்கிற இவளைப் போன்ற அநாதைகளுக்கு வயிறு காயும் இந்த வேளையில் இதே தெருவில் பாயசமும் வடையும் சமைத்துச் சாப்பிடுகிறவர்களும் இப்பார்களே? சமுதாய வாழ்க்கையில் உள்ள சுகதுக்கங்களில் எத்தனை முரண்பாடுகள்? இந்த நாட்டில் இப்படி அநாதைகள் நம்மிடையில் இருக்கிறவரையில் பாயசம் வைத்துப் பண்டிகைகள் கொண்டாடு வதற்குச் கூச வேண்டும். இவர்களுக்குத் தலைசாய்க்க இடமில்லாதவரை மற்றவர்கள் கட்டிலும் மெத்தையும் இட்டுப் படுப்பது பாவம்' என்று இத்தகைய பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனைப் பட்டிருக்கிறான் அவன். ஆனால் இன்று அவனே இந்த ஆலமரத்தடியில் கேள்விப்பட்ட உண்மைபார்த்த உண்மை முற்றிலும் புதியதாயிருந்தது. கண்களில் ஏழ்மையின் ஏக்கம் தெரிய வழிமேல் நின்று கொண்டு போவோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/148&oldid=595097" இலிருந்து மீள்விக்கப்பட்டது