பக்கம்:பொன் விலங்கு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 161

"அன்புக்குரிய இளைஞர் சத்தியமூர்த்திக்கு அநேக ஆசிகள். உங்கள். கடிதம் கிடைத்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியில்வேலை பார்க்கவேண்டும் என்று நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். எடுத்த எடுப்பில் உங்களைப் பார்த்தவுடன் தமிழ் விரிவுரையாளர் பதவியை உங்களுக்குத்தான் தரவேண்டும் என்று எனக்கே தோன்றியது. ஆனால் நமது சந்திப்பின் முடிவில் நீங்கள் பேசிய சில வார்த்தைகள் என் மனத்தை மிகவும் ஆழமாகப் புண்படுத்திவிட்டன. உங்களைத் தவிர வயதும் அநுபவமும் அதிகமாக உள்ள வேறு சிலரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித் திருக்கிறார்கள். இருந்தாலும் இப்போது உங்களையே இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறேன். ஆர்டர் கல்லூரி அலுவலகத்திலிருந்து தனித் தபாலில் உங்களுக்குக் கிடைக்கும். நல்ல ஆசிரியர்கள்தான் என்னுடைய கல்லூரியின் செல்வம். நீங்கள் என்னுடைய கல்லூரிக்கு ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர, மல்லிகைப் பந்தல் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து. நான் எதிர்பார்க்கிற பணிவும் விநயமும் நாளடைவில் தானாகவே உங்களிடம் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறேன்..."

என்று மிகவும் சுருக்கமாகக் கடிதத்தை முடித்திருந்தார் பூபதி. இந்தக் கடிதத்தில் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் சத்தியமூர்த்தி. 'மல்லிகைப் பந்தல் கல்லூரியின் அநுப்வங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து' என்று எழுதியிருக்கும் வாக்கியத்தை எந்த அர்த்தத்தில் எப்படிப் புரிந்து கொள்வது என்று தயங்கினான் அவன்

தனக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் அந்த வாக்கியம் எழுதப்பட்டுள்ளதா அல்லது குத்திக் காட்டும் முறையில் எழுதப்பட்டுள்ளதா என்று சத்தியமூர்த்தியால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கடிதத்தாளில் சம்பள விகிதம் - வந்து வேலையை ஒப்புக் கொள்ளவேண்டிய தேதிஎல்லாம் குறிப்பிட்டு ஆர்டர் டைப் செய்து அனுப்பியிருந்தார்கள். நிர்வாகி என்ற முறையில் அந்த ஆர்டரின் கீழேயும் பூபதிதான்

பொ. வி - 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/163&oldid=595130" இலிருந்து மீள்விக்கப்பட்டது