பக்கம்:பொன் விலங்கு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - பொன்விலங்கு

கையொப்ப மிட்டிருந்தார். கல்லூரி கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படும் முதல் நாளிலேயே அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து வேலையை ஒப்புக் கொண்டுவிடவேண்டும் என்று ஆர்டரில் கண்டிருந்தது. பூபதியின் கடிதத்தையும் கல்லூரி ஆர்டரையும், மடித்து வைத்துவிட்டுப் பாரதியின் கடிதத்தை எடுத்து ஆவலோடு பிரித்துப் பார்த்தான் அவன். சென்ற கடிதத்தில் வைத்திருந்ததைப்போலவே இந்தக் கடிதத்திலும் இரண்டு மூன்று குடை மல்லிகைப் பூக்களை மறக்காமல் சொருகியிருந்தாள் அவள்,

என் இதயமாகிய பீடத்தில் யாருடைய ரோஜாப்பூப் பாதங்கள் பதிந்து கொண்டிருக்கின்றனவோ அவருக்கு அநேக கோடி வணக்கங்களுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.என்னுடைய முன் கடிதத்தில் நான் உங்களை வேண்டிக் கொண்டிருந்தபடி அப்பாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை அவர் வெளியே போயிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நானும் எடுத்துப் படித்தேன். அவ்வளவு அருமையான இலக்கிய நயம் நிறைந்த கடிதத்தைப் படித்த பின்பும் அப்பாவால் எப்படி மனம் நெகிழாமல் இருக்க முடியும்? வேறு ஒரு சமயமாயிருந்தால் அப்பாவை உங்களுக்குச் சாதகமாக நினைக்க விடாமல் கல்லூரி முதல்வர் பிடிவாதமாக ஏதாவது சொல்லிக் கெடுத்துக் கொண்டேயிருப்பார். ஆனால் இப்போது சூழ்நிலை எந்த விதத்திலும் கல்லூரி முதல்வருக்குச் சாதகமாக இல்லை. சில நாட்களுக்கு முன் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதைப்பற்றி உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். .. - -

இராஜாராமன் என்று ஒரு மாணவன் பி.எஸ்ஸி, பரீட்சை முடிவுகள் செய்தித்தாளில் வெளியான தினத்தன்று தான் பரீட்சையில் தேறவில்லை என்பதற்காகக் கல்லூரி முதல்வரைக் குத்திக் கொலை செய்ய முயன்றான். 'பல்கலைக் கழகத்தார் நடத்துகிற பொதுப் பரீட்சையில் நீ தேறாமல் போனால் அதற்குக் கல்லூரி முதல்வர் எப்படி அப்பா காரணமாக முடியும்?' என்று அப்பா அந்தப் பையனை விசாரிக்கும்போது கேட்டார். அந்தப் பையனோ கல்லூரி நாட்களிலிருந்தே நான் உருப்படாமல் போக வேண்டும் என்று பிரின்ஸிபல் திட்டமிட்டுக் கொண்டு சதிசெய்தார் சார் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/164&oldid=595132" இலிருந்து மீள்விக்கப்பட்டது