பக்கம்:பொன் விலங்கு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பொன் விலங்கு "அதையும்தான் பார்ப்போமே?" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சத்தியமூர்த்தி. குமரப்பனும் ஒருவாறு அதற்குச் சம்மதித்தான். சித்திரா பெளர்ணமியன்று மாலை ஐந்து மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட வேண்டும் என்று பேசிக்கொண்டு பிரிந்தார்கள் நண்பர்கள். நடுவில் ஒரு நாள்தான் இருந்தது. அதுவும் வேகமாகக் கழிந்து விட்டது. பெளர்ணமியன்று காலையில் மோகினியக்கா ஞாபகப்படுத்துமாறு சொல்லி அனுப்பியதாக மறுபடியும் அந்தச் சிறுவன் சத்தியமூர்த்தியிடம் வந்துவிட்டுப் போனான். -

குமரப்பன் அன்று மாலை நாலரை மணிக்கே சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு வந்துவிட்டான். இருவருமாகப் புறப்பட்டுத் தமுக்கம் பொருட்காட்சி மைதானத்துக்கு யானைக்கல் கல்பாலம் வழியாக நடந்தே சென்றார்கள். பொருட்காட்சியின் பகுதிகள் எல்லா வற்றையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு மோகினியின் நாட்டியம் நடைபெற இருந்த திறந்த வெளி அரங்குக்குள் அவர்கள் நுழையும் பொழுது ஆறேகால்மணி. கூட்டத்தில் எள்போட்டால் விழ இடமில்லை போலக்கூடியிருந்தது. அரங்குக்கு மிக அருகில் இரண்டாவது வரிசையில் வசதியான இடத்தில் நடுவாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சத்தியமூர்த்தியும் குமரப்பனும். • ,

அப்போதும் அந்தச்சிறுவன்வந்து கூட்டத்தை நன்றாக உற்றுப் பார்த்து இரண்டாவது வரிசையில் சத்தியமூர்த்தி அமர்ந்திருப்பதைக் கண்டதும் முகமலர்ச்சியோடு திரும்பிச் சென்றான். முன் வரிசையில் வேறு சில பிரமுகர்களோடு கண்ணாயிரமும் தென்பட்டார். சிறிதும் தாமதமில்லாமல் சரியாக ஏழுமனிக்கு நாட்டியம் ஆரம்பமாகி விட்டது. அரங்கை மறைத்துக்கொண்டிருந்த திரை விலகியதும் பாட்டும் தாளமும் சலங்கை ஒலியுமாகத் தெரிந்த முதல் காட்சியே சத்தியமூர்த்தியை மெய் சிலிர்க்கச் செய்தது. - . . . .

தன்னுடைய வாழ்வையும் உடல் பொருள் ஆவி முதலிய சகலத்தையும் கண்ணபிரானோடு சேர்க்குமாறு காதற் கடவுளாகிய மன்மதனை ஆண்டாள் வேண்டிக்கொள்வதாக ஆரம்பமாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/170&oldid=595146" இலிருந்து மீள்விக்கப்பட்டது