பக்கம்:பொன் விலங்கு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 185

விரிவுரையாளனாக- இலட்சிய ஆசிரியனாகப் பழகப்போகிறோம் என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் தொலைதூரத்து மகிழ்ச்சியாய் ஞாபகத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அருகில் வர மறுக்கும் மகிழ்ச்சியும், தொலைவில் விலகிப் போக மறுக்கும் துயரமுமாக உணர்வில் எல்லை கட்டிச் சொல்ல வகையில்லாததோர் மன நிலையோடு இருந்தான் அவன். ஊசியில் உள்ள சிறிய துளையில் நூல் நுழையாமல் தவறிக் கொண்டே இருப்பதுபோல் மனத்தின் பிடியில் சிக்க வேண்டிய நிம்மதி ஒன்று-சிக்காமலே விலகி விலகிப் போய்க்கொண்டிருப்பதை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க இந்தத் தவிப்பு அவன் மனத்தில் அதிகமாகியது.

அன்று பகலில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. வெயில் தணிந்த பின் மாலையில் குமரப்பனை அவனுடைய அறைக்குச் சென்று அழைத்துக்கொண்டு கடைக்குப் போய்ப் பயணத்துக்கான சில பொருள்களை வாங்க எண்ணியிருந்தான் சத்தியமூர்த்தி. காலையில் தந்தை அவனுடைய செலவுக்காகவும், துணிமணிகள் வாங்கிக் கொள்வதற்காகவும் இருநூறு ரூபாய் பணம் கொடுத்திருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியில் அவன் முதல் மாதச் சம்பளம் வாங்குகிற வரை எல்லாம் இந்தத் தொகையில் இருந்துதான் செலவழித்துக் கொள்ளவேண்டும். மலைப்பிரதேசமாக இருப்பதால் இரவில் குளிர் வாட்டிவிடும். கம்பளிப் போர்வை ஒன்றும், ஸ்வெட்டரும் வாங்கிக் கொள்ள வேண்டும். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ச் சேர்ந்தபின் வசிப்பதற்கு ஒரு சிறிய அறை பார்த்துக்கொண்டு அதற்கும் வாடகை முன் பணமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

'தனி அறையாகப் பார்த்துக் கொண்டால் வாடகை அதிகமாகும். உன்னைப்போல் அந்த ஊரில் வேலை பார்க்கும் வேறு ஒருவரோ, இருவரோ வசிக்கும் அறையில் மற்றோர் ஆளாக நீயும் சேர்ந்துகொண்டு வாடகையைப் பங்கிட்டுக் கொள்' என்று அப்பா யோசனை சொல்லியிருந்தார்.

'சனி, புதன் எண்ணெய்க் குளி தவறாதே! மலைக் காட்டு ஊராயிருப்பதனால் எப்போது குளித்தாலும் வெந்நீரில் குளி, இரவில் ஒரு மணி இரண்டு மணி என்று கால வரம்பில்லாமல் தூக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/187&oldid=595183" இலிருந்து மீள்விக்கப்பட்டது