பக்கம்:பொன் விலங்கு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 299

'பயமுறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் நான் செப்பிடு வித்தைக்காரனோபில்லி சூனியக்காரனோ இல்லை. எனக்குநியாயம் என்று தோன்றியதை நான் உரத்த குரலில் சொன்னேன். அந்தச் சமயத்தில் பேசாமல் இருந்த நீங்கள் எல்லோரும் இப்போது என்னைப் புகழ்வதைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நல்லதை வெளிப்படையாக ஆதரிக்கவும், கெட்டதை வெளிப்படையாக எதிர்க்கவும் தெரியாமல் கல்லூரிக்காம்பவுண்டுதாண்டுகிறவரை ஒரு விதமாகவும் தாண்டி வெளியே வந்தபிறகு ஒரு விதமாகவும் பேசுகிற உங்களை எல்லாம் நான் எப்படிநம்ப முடியும்? நியாய உணர்ச்சியை இடத்துக்கேற்ப மறைத்துக் கொள்கிற கோழைத்தனம் படித்தவர்களிடமே இருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?' என்று ஆத்திரத்தோடு அவர்களை எதிர்த்துக் கேட்டான் சத்தியமூர்த்தி. எதிலும் உண்மையாகவும், வெளிப் படையாகவும் இத்தனை அஞ்சாமையை ஒரு மனிதனோடு இணைத்துப் பார்க்க முடியாத அவர்கள், "இந்தப் பையன் அசட்டுத் தைரியம் பேசுகிறான்; போகப் போக வாழ்வில் அதிகமாகக் கஷ்டப்படுவான்' என்று விலகிப்போய் வேறு விதமாக வேதாந்தம் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அன்று மாலை சில மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக்கொண்டு அவனுடைய அறைக்கு வந்திருந்தார்கள். அந்த மாணவர்களையும் உடனழைத்துக் கொண்டுபோய் எதிர்ப்புறம் ஏரிக்கரைப் புல்வெளியில் நீர்ப்பரப்பை ஒட்டினாற் போல் கரையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. சங்க இலக்கியத்திலிருந்து 'ஸாமர் ஸ்ெட்மாம் வரை அவர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உற்சாகமாக விளக்கிப் பேசிக் கொண்டிருந்தான் அவன். நல்ல இசையரங்கில் கட்டுண்டு வீற்றிருக்கும் இரசிகர்களைப் போல் மாணவர்கள் தங்களை மறந்து ஈடுபட்டு அவன் கூறுவனவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயம் பார்த்து ஏரிக்குள் தன் தோழிகளோடு படகில் போய்க் கொண்டிருந்த பாரதி, சத்தியமூர்த்தி உட்கார்ந்திருந்த பக்கமாகப் படகைக் கொணர்ந்து நிறுத்திக் கொண்டு, 'சார்! உங்களைத்தானே கூப்பிடுகிறேன். படகில் ஒரு ரவுண்டு சுற்றலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/301&oldid=595439" இலிருந்து மீள்விக்கப்பட்டது