பக்கம்:பொன் விலங்கு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பொன் விலங்கு

கண்ணாயிரம் கீழேயிருந்த சந்தனக் கும்பாவையும் பன்னீர் செம்பையும் எடுத்துக்கொண்டு குழைவாக மோகினிக்கு அருகே வந்தார். அவ்வளவில் மோகினி எரிமலை யானாள். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான உணர்ச்சிகளையும் சிறுமைகளையும் அப்போது தன் எதிரே பார்ப்பது போல் சுற்றியிருந்தவர்களைத் துச்சமாகப் பார்த்தாள். அவள் எங்கே தாறுமாறாகப் பேசிவிடப் போகிறாளோ என்ற பயத்தில் கண்ணாயிரத்தின் கைகள் சந்தனக் கும்பாவோடு நடுங்கிக் கொண்டிருந்தன. மோகினியின் கண் பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது.

"இவங்க பணம் நமக்கு வேண்டாம். கலியாணத்துக்கு நான் சும்மா ஆடினதாக இருக்கட்டும். புறப்படும்மா... புறப்படறியா இல்லையா?" என்று வார்த்தைகளை வீசிவிட்டு அம்மா பின்னால் வருகிறாளா இல்லையா என்பதைக்கூட எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்து அங்கிருந்து வெளியேறினாள் மோகினி. காலில் சலங்கைகள் கோபமாக ஒலிக்க அவள் ஆத்திரத்தோடு தரையையும் அவர்கள் நினைப்பின் சிறுமையையும் ஒரு சேர மிதித்துக் கொண்டு அந்தத் தொண்டு நிலைமையைத் து'வென்று தள்ளிவிட்டு வெளியேறிச் சென்றதுகூட ரெளத்திராகாரமானதோர் அழகிய அபிநயம் போல் தோன்றியது.

25

sk

தக்காளிப் பழத்தின் தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தின் சின்னஞ்சிறு பச்சை நிறத்தை எடுத்துக் காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாயிருக்கின்றன. -

k
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/312&oldid=595461" இலிருந்து மீள்விக்கப்பட்டது