பக்கம்:பொன் விலங்கு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 313

அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிந்தது. 'அடிக்கடி விடுதிகளில் சுற்றாதீர்கள். பிள்ளைகளிடம் நம்மைப் பற்றி ஒர் அத்து இருக்க வேண்டும். அடிக்கொரு தரம் அங்கே போய் வந்தால் அத்துப் போய்விடும்" என்று பேச்சுப் போக்கில் வார்டன் அவனிடம் ஒருநாள் எச்சரித்தார். பூபதியோ மாணவர்களின் விடுதியைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்று அவனிடம் கூறியிருந்தார். வார்டனின் போக்கு விசித்திரமானதாக இருந்தது. சத்தியமூர்த்தியாக எதையும் செய்ய முடியாமல் தடுத்துக்கொண்டேயிருந்தார் அவர். இந்த நிலையில் அன்று காலை ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்குப்பின் வார்டனிடம்' பட்டும் படாமலும் தான் பழகிய நிலையை மாற்றிக்கொண்டு கண்டிப்பாகப் பேசியே தீரவேண்டிய அவசியம் சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டிருந்தது மல்லிகைப் பந்தல் கல்லூரியில் விடுதி விதிகள் ஓரளவு கண்டிப்பானவை. விடுதி அறையில் முதலாண்டு மாணவர்களானால் ஒர் அறைக்கு இருவர் வீதமும் இறுதியாண்டு மாணவர்களானால் ஓர் அறைக்கு ஒரே மாணவர் வீதமும் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகப் பரீட்சைக்குப் போகிறவர்களாயிருப்பார்கள் என்பதால், அவர்கள் படிப்பில் சிரத்தைகாட்டவேண்டுமென்று தனி அறையில் விடப்பட்டிருந்தார்கள். விடுதிக் கட்டணமும், உணவுச் செலவும் மொத்தச் செலவை ஈவு வைத்து (டிவைடிங் ஸிஸ்டம்) வசூலிக்கப்பட்டன. சைவ, அசைவ உணவுக் கூடங்கள் தனித்தனியே இருந்தன. எங்கே சுற்றினாலும் எந்த மாணவனும் இரவு எட்டு மணிக்குள் தன் அறைக்குத் திரும்பியாக வேண்டும். தகுந்த காரணங்கள் இருந்தால் வார்டனிடமோ உதவி வார்டனிடமோ சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டுதான் வெளியே போக வேண்டும். ஒரு மாணவன் சட்டத்தை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் வெளியேறிப் போயிருப்பதாகத் தோன்றினால் அவன்திரும்பிவந்து அறைக்குள் நுழையமுடியாமல் அவன் அறையில் ஏற்கெனவே பூட்டியிருந்த பூட்டுக்கு மேல் இன்னொரு பூட்டைப் பூட்டிக் கவுண்டர் லாக் செய்யும் அதிகாரம் வார்டனுக்கு உண்டு. இதனால் தவறு செய்த மாணவன் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/315&oldid=595467" இலிருந்து மீள்விக்கப்பட்டது