பக்கம்:பொன் விலங்கு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 341

ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக ராவுலேயும் காவல் இருக்க வேண்டியிருக்கு. தோட்டம் பட்டுப்போய்க் காய்ப்பு நின்னப்புறம் கிராமத்துக்குள்ளே போயிடுவோம். அதுவரை அத்தானும் நானும் இங்கேதான் வாசம்' என்றாள் அந்தப் பட்டிக்காட்டுப் பெண்.

வெள்ளரித் தோட்டத்தில் மட்டுமில்லை நாடு நகரங்களில் வீதி தெருக்களிலும் திருடர்கள் உண்டு பெண்ணே என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு சிரித்தாள் மோகினி. இதற்குள் அவளுடைய அத்தான் கூடை நிறைய வெள்ளரிப் பிஞ்சோடு திரும்பி வந்திருந்தான். அந்தக் கூடையைக் கையில் வாங்கிக்கொண்டு, 'காவல் முடிஞ்சதும் ஊருக்குள்ளே போயிடுவோமென்றாயே! உங்கள் ஊர் எங்கே இருக்கிறது?" என்று அவளைக் கேட்டாள் மோகினி.

"பக்கத்திலேதாம்மா இருக்குது. இங்கிருந்து தென் கிழக்கா ரெண்டு மைல் போனா சொகவாசம்’னு ஒரு கிராமம் இருக்கு அதுதான் எங்க ഉബit...'

“என்னது? என்னது? அந்த ஊரின் பெயரை இன்னொரு தரம் சொல்லு" என்று அடக்க முடியாத ஆவலோடு மோகினி மீண்டும் வினவினாள். - . . . . .

"அதுதான் சொன்னேனே சொகவாசம்'பாங்கம்மா."

"சுகவாசம்-எத்தனை பொருத்தமான அழகிய பெயர்' என்று தனக்குள் மெல்லச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டாள் மோகினி. அப்போது கண்ணாயிரம் வந்து புறப்படுவதற்கு அவசரப்படுத்தவே, அவள் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

"எப்பவாச்சும் இந்தப் பாதையா வந்தா மறுபடியும் வாங்கம்மா' என்று அந்தப்பட்டிக்காட்டுப் பெண் தன்அத்தானுக்கு அருகில் நின்று சிரித்துக்கொண்டே இரைந்து கூறினாள். அவளுட்ைய பாக்கியத்தை வியந்தவளாக மோகினி காரில் ஏறினாள். அம்மாவும் கண்ணாயிரமும் ஏறிக்கொண்ட பின், கார் சாலையின் புழுதியை வாரி இறைத்து விரைந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/343&oldid=595528" இலிருந்து மீள்விக்கப்பட்டது