பக்கம்:பொன் விலங்கு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பொன் விலங்கு

இத்தனை திருப்தியும் இத்தனை நிம்மதியும் இருக்க முடியாது என்பதைப்போல் அத்தனை திருப்தியாகவும் நிம்மதியாகவும் சிரிக்கிறார்கள், மகிழ்கிறார்கள், வாழ்கிறார்கள்.

சமூக வாழ்க்கையில் கண்ணாயிரத்தை விடச் சிறந்த ஆண்மகன் இந்த வெள்ளரித் தோட்டத்து அத்தானாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் இவன் யாரையும் ஏமாற்றி வாழ விரும்புவதில்லை. எவரையும் சார்ந்து நின்று வாழவும் விரும்புவதில்லை. தன் கையால் தனக்காக உழைத்து வாழுகிறான் இவன். தன்னுடைய புகழுக்கும் பழிக்கும் தானே காரணமாக இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கையும், தன்னம்பிக்கையும் இவனுக்கு இருக்கின்றன. இவனுடைய மனைவி அதிக விலை கொடுத்துப் பெருமையோடு வாங்கித் தின்கிற ஆப்பிள் பழத்தைவிட, ஊருணிக்கரை மேட்டில் காய்கிற வெள்ளரிப் பிஞ்சில் சிறப்பாகச் சுவை கண்டிருக்கிறாள். வாழ்க்கையில் இவர்களைப் போல் கொடுத்து வைத்தவர்கள் வேறெவர் இருக்கமுடியும் என்றெண்ணிக் கொண்டேஎதிரில் நின்ற அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தாள் மோகினி. அந்தப் பெண் வெட்கத்தோடு தலைசாய்த்துச் சிரித்துக்கொண்டே மோகினியை நோக்கிக் கேட்டாள்.

"என்னம்மா என்னையே அப்படிப் பார்க்கிறீங்க...?" "ஒன்றுமில்லை. இந்த இடத்தில் உங்களுடைய குடிசை ஒன்று மட்டும்தானா? வேறு வீடுகளே இல்லையா?" என்று சம்பந்தமில்லாமல் அவளிடம் வேறு எதையோ கேட்டுப் பேச்சை மாற்றினாள் மோகினி. -

"நாங்க மட்டும்தான் தனியா இந்தக் குடிசையிலே இருக்கோம். நாங்களும் வெள்ளரித்தோட்டக் காவலுக்காக நாலு மாதம் இங்கே இருப்போம். அப்புறம் ஊருக்குள்ளாரப் போயிடுவோம். தோட்டம்னு போட்டுட்டா பாதை மேலே வரவங்க, போறவங்களுக் கெல்லாம் கூடத் திருடனுமின்னு ஆசை வருது. பகலிலேதான் திருடறாங்கன்னு பார்த்தால், இராத்திரி இரண்டு மைலுக்கு அப்பாலே இருக்கிற டுரிங் பயாஸ்கோப்ரெண்டாவது ஆட்டம்விட்டுத்திரும்பி வார சனங்க வெள்ளரித் தோட்டத்திலே புகுந்து கைவைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/342&oldid=595526" இலிருந்து மீள்விக்கப்பட்டது