பக்கம்:பொன் விலங்கு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

k ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேண்டும். இல்லாவிட்டால் அதை நாம் ஒருபோதும் நாணயத்தோடு செய்வதற்கு முடியவே முடியாது.

காலையில் சத்தியமூர்த்தி விழித்து எழுந்திருப்பதற்கு முன்பாகவே குமரப்பன் எழுந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு மாடி வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக்கொண்டே எதிர்ப்புறம் மலைக்காட்சிகளையும், ஏரியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆள் மிகவும் உற்சாகமாய் இருப்பதற்கு ஓர் அடையாளம் போல் அவனுடைய வாயிதழ்கள் ஏதோ விருப்பமான பாடலைச் சீட்டியடித்துக் கொண்டிருந்தன. -

'இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே, குமரப்பன்? நீ எப்போதுமே நேரங்கழித்து விழித்துக் கொள்கிறவனாயிற்றே?" என்று கேட்டுக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் இன்னும் எழுந்திருக்கவில்லை. இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்.

'ரொம்ப நாட்களாக ரொம்ப விஷயங்களில் நேரம் கழித்துத்தான் விழித்துக் கொண்டிருந்தேனடா, சத்தியம்! ஆனால் இப்போதெல்லாம் சீக்கிரமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். காலையில் மட்டுமில்லை; எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களிலுமே சீக்கிரமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்' என்று குமரப்பன் கூறிய பதிலில் இரண்டு தொனி இருந்தது. சத்தியமூர்த்தி அவ்வளவில் விட்டு விடாமல் நண்பனை மேலும் துண்டிக் கேட்டான்: ‘'என்னதான் சொல்கிறாய் நீ? உன்னுடைய திடீர் வரவுதான் ஆச்சரியமாக இருக்கிறதென்றால் நீ பேசுகிற பேச்சும் ஆச்சரியமாகவே இருக்கிறது. குமரப்பன்! கொஞ்சம் புரியும் படியாகத்தான் சொல்லேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/380&oldid=595610" இலிருந்து மீள்விக்கப்பட்டது