பக்கம்:பொன் விலங்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 37

மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள் திருமணமாக வேண்டிய வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முதலில் திருமணமாக வேண்டு மென்பதுதான் எங்கள் குடும்பத்துக்கு இப்போது பெரிய பிரச்சினை."

'உங்கள் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் உங்களுக்குக் கூறவேண்டிய அறிவுரை ஒன்றும் உண்டு.” -

"দোষ্ট্রোনো?”

"நான் சொல்லுகிறேன். அப்படிச் சொல்வதை உங்கள் மேல் அவநம்பிக்கைப்பட்டுச் சொல்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பொதுவாக வயதில் மூத்தவன் என்ற உரிமையோடு வயதில் இளைஞராகிய உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்

$ $

நான. -

'இது ஒரு கோ-எஜூகேஷன் கல்லூரி. இங்கு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு இன்றுவரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர்தான் மிக இளம்பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது." -

鲨絮 3.

"இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தாரிடம் வாங்கி யிருக்கும் பெரிய பெரிய கிராண்ட் தொகைகளுக்காகவோ முதல் தரக் கல்லூரி என்ற பெயருக்காகவோ நான் பெருமைப்படவில்லை. 'ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தரமான கல்லூரி' என்று இந்த மாகாணத்துக்கு அப்பால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களும் போற்றும்படி ஒரு நல்ல பெயரை இந்தக் கல்லூரி எடுத்திருக்கிறது என்பதற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."

"அந்த நல்ல பெயர் என்னால் ஒரு சிறிதும் கெட்டு விடாது

&माiां....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/39&oldid=595629" இலிருந்து மீள்விக்கப்பட்டது