பக்கம்:பொன் விலங்கு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 433

இல்லை என்பதை நிரூபிப்பதுபோல சத்தியமூர்த்தியும் அவன் பெற்றோர்களும் சுகமாயிருப்பார்கள் என்று தாம் நம்புவதாக ஒரு வரி சேர்த்திருந்தார் பூபதி. காலாண்டு விடுமுறைத் தொடக்கத்தில் சத்தியமூர்த்தி மாணவர்களை அழைத்துச் சென்றிருந்த சோஷல் செர்வீஸ் காம்ப்' நன்றாயிருந்ததாகத் தாம் கேள்விப் பட்டதாகவும், எந்தக் கிராமத்தில் மாணவர்களால் சாலை செப்பனிடப்பட்டதோ அந்தக் கிராமத்து மக்களும், பஞ்சாயத்துத் தலைவரும் அதற்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு எழுதியிருப்பதாகவும்குறிப்பிட்டு அவனைப் பாராட்டியும் ஒரு வாக்கியத்தை எழுதி அந்தக் கடிதத்தை முடிந்திருந்தார் அவர்-கீழே மதுரையில் அவர் வந்து தங்கப் போகிற பங்களாவின் விலாசமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

"என்னை சங்கதி? நீ ஊருக்குப் புறப்பட்டு வந்ததைப் பற்றிப் பிரின்ஸ்பால் ஏதாவது தகராறு செய்கிறாரா?' என்று கடிதத்தைப் படித்து முடித்த சத்தியமூர்த்தியை நோக்கிக் கேட்டான் குமரப்பன்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை கல்லூரி அதிபர் பூபதிக்குப் 'பத்மபூரீ விருது கிடைத்திருக்கிறதாம். விஜயதசமியன்று டில்லியில் குடியரசுத்தலைவர் விருதுகளை வழங்குகிறாராம். டில்லிக்குப்போக விமானம் ஏறுவதற்காகப் பூபதி இன்று இங்கே வருகிறார். அவரைச் சந்திக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சத்தியமூர்த்தி, அவனும் குமரப்பனும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே வீட்டு வாசலில் சங்கீத விநாயகர் கோயில் தெருப் பையனின் தலைதெரிந்தது. சத்தியமூர்த்தி வாசற்பக்கம் சென்று பையனை எதிர்கொண்டான்.

"மோகினி அக்கா சொல்லியபடி மீனாட்சி கோவிலிலே அர்ச்சனை செய்தாச்சு, நவராத்திரிக் கூட்டம் நிலை கொள்ளவில்லை. உள்ளே போய் அர்ச்சனை முடிஞ்சு வெளியில்வர நேரமாயிடிச்சு. நீங்க சாயங்காலம் ஆஸ்பத்திரிக்குப் போகப்போறதாகச் சொல்லி யிருந்தீங்களே.போனாஅக்காவிடம்இந்தஅர்ச்சனைப்பிரசாதத்தைக் கொடுத்திடுங்க..." என்று அர்ச்சனை செய்து வாங்கிய குங்குமப் பொட்டலத்தையும், இலையில் சுற்றிக் கட்டியிருந்த பூவையும் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு வந்தான் பையன். அப்போது சத்தியமூர்த்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தயங்கினான்.

பொ. வி-28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/435&oldid=595680" இலிருந்து மீள்விக்கப்பட்டது