பக்கம்:பொன் விலங்கு.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 441 .

கண்ணாயிரமும் சத்தியமூர்த்தியின் அறிமுகத்தையோ, அவனுடைய சிறப்பியல்களையோ சிறிதும் விரும்பவில்லை. தவிர சத்தியமூர்த்தி அவர்களுக்குப் புதிதாக அறிமுகமாக வேண்டியவனும் இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காகக் கண்ணாயிரம் ஏதோ காரியமாக எழுந்து போய் விட்டார். ஜமீன்தார் அப்படி எழுந்து போய்விட வில்லையானாலும் பூபதி கூறிய எல்லாவற்றையும் சிறிதுகூட முகமலர்ச்சியில்லாமல் கடுகடுப்போடு கேட்டுவிட்டு ஐ...n என்று அழுத்தமாகச் சொல்லியபடியே நிமிர்ந்து சத்தியமூர்த்தியை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை அவனை வாள்கொண்டு அறுப்பதுபோல் அறுத்தது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்த விரும்பத்தகாத சூழலில் நிகழும் விரும்பத்தகாத அறிமுகத்துக்காகக் கால்கள் பொருந்தாதபடி நின்றுகொண்டிருந்தான் அவன். கால்மேல் கால்போட்டு அலட்சியமாக உட்கார்ந்திருந்த ஜமீன்தார் கால் பாதத்தை மேலும் கீழுமாக ஆட்டியபடி'ஐ.n என்று வார்த்தைகளை இழுத்ததை நினைத்து மனம் வெறுத்து அருவருப்பு அடைந்தாலும் அங்கே தன்னுடைய எந்த உணர்ச்சியையும் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள முடியாமல் நின்றான் சத்தியமூர்த்தி. *

ஜமீன்தாருக்கு சத்தியமூர்த்தியை அறிமுகம் செய்த போது அவர் அதிக அலட்சியமாக இருந்ததைப் பூபதியும் அறிந்து கொண்டாலும் அதற்குக் காரணமாக எதையும் மனத்தில் கற்பித்துக் கொள்ளவில்லை அவர். அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி நினைத்துத் தலைகுனியும்படியான வேறு ஒரு நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. அவனும் பூபதியும் அங்கு நின்று கொண்டிருந்தபோதே ஜமீன்தார் ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, "டேய் பின்புறம் தோட்டத்தில் அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவன் நின்று கொண்டிருப்பான். நான் கூப்பிட்டேனென்று அந்தக் கிழவனை இங்கே வரச்சொல்" என்று ஏவினார். ஐந்து நிமிஷங்கள் கழித்து ஜமீன்தாரால் அழைக்கப்பட்ட அந்தக் 'கிழவன் வந்து கைகட்டிவாய் பொத்தி நின்றபோது பூபதியோடு பேசிக்கொண்டிருந்த சத்தியமூர்த்தி, தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஜமீன்தாருடைய ஏவலுக்காக ஓடிவந்து கைகட்டி வாய் பொத்தி நின்ற கிழவர் வேறு யாருமில்லை; அவனுடைய அருமைத் தந்தைதான். சத்தியமூர்த்திக்கு மனம் கொதித்தது. வந்து பவ்வியமாக நின்று கொண்டிருந்த அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/443&oldid=595689" இலிருந்து மீள்விக்கப்பட்டது