பக்கம்:பொன் விலங்கு.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 பொன் விலங்கு

தந்தையிடம், 'உள்ளே சிகரெட் டின் இருக்கும், புதிதாக ஒன்று எடுத்துக்கிட்டு வாங்க..." என்று கூறி ஜமீன்தார் கட்டளையிட்டதை சத்தியமூர்த்தி தன் இரு விழிகளாலும் கண்டு இரு செவிகளாலும் கேட்டு வயிறெரிந்தான். அந்த நேரத்து உணர்ச்சிகளின் வேகத்தை அவனால் அங்கு வெளியே காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. இதே வெட்கத்தோடுதான் தந்தையும் அவனைப் பார்க்காததுபோல் அங்கிருந்து மெல்ல நழுவிப் போயிருக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்தித் தலைகுனிய வைக்க வேண்டுமென்றே ஜமீன்தார் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதை சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் புரிந்துகொண்டு அங்கே என்ன செய்ய முடியும்? பூபதியோ அவனுடைய மனப் போராட்டங்களையும் வேதனையையும் உணர்ந்து கொள்ளாமல் எதை எதையோ அவனிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனும் பூபதியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே ஜமீன்தார் சிகரெட் டின் னும் கையுமாகக் கண்ணாயிரம் பின்தொடர அவர்களைக் கடந்து பங்களாவின் முன் பகுதிக்குச் சென்றார். அப்படிச் செல்லும்போதே ஜமீன்தார் ஒரு கணம் பின்னால் திரும்பி, 'ஏய் பூபதி நானும் கண்ணாயிரமும் வெளியில் எங்காவது புறப்பட்டு விட்டோமோ என்று நினைத்துக்கொள்ளாதே. வெளியேதோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். பேசி அனுப்பிவிட்டு நீயும் வா... காற்றாடத் தோட்டத்தில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கலாம்" என்று பூபதியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

ஜமீன்தாருக்கும் பூபதிக்குமிடையே இருப்பதாகத் தெரிந்த நெருக்கமும், நேசமும் சத்தியமூர்த்தியை திகைத்துப் போகச் செய்திருந்தன. "ஏய் பூபதி என்று போகிற போக்கில் மதயானை நடப்பதுபோல் நடந்துகொண்டேகூப்பிட்டுப் பேசவேண்டுமானால் மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்குப் பூபதியிடம் எவ்வளவு உரிமையும் நேசமும் இருக்கவேண்டும்?' என்றெண்ணி தனக்குள் வியந்தான் சத்தியமூர்த்தி. பூபதியோ அவனிடமே மேலும் மேலும் விடாப் பிடியாய் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி ஜமீன்தாருக்கு எல்லாரிடமும் அத்தனை கலகலப்பாகப் பழக வராது. உங்களிடம் அவர் அதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/444&oldid=595690" இலிருந்து மீள்விக்கப்பட்டது