பக்கம்:பொன் விலங்கு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 451.

'வாருங்கள்...நேற்று வருகிறேனென்று சொல்லி ஒரேயடியாக ஆசைப்பட வைத்துக் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டீர்களே?..பையன்வந்து அர்ச்சனைப் பிரசாதத்தைக் கொடுத்து விவரம் சொல்கிறவரை நான் தவியாய்த் தவித்துப் போனேன்."

"நேற்றே வந்திருந்தால் உன்னை இன்று காலையில் இப்போது பார்த்தேனே-இந்த அழகிய கோலத்தில் பார்த்திருக்க முடியாது மோகினி பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையா என்பதைப் பற்றி நக்கீரர் சிவபெருமானோடு கருத்து மாறுபட்டு வாதிட்டதாக ஒரு பழைய கதை உண்டு. உன்னுடைய கூந்தல் நறுமணமோ இந்த ஆஸ்பத்திரி வார்டையே கமகமக்கச் செய்து கொண்டிருக்கிறது. கரிய மேகங்களிடையே பாதி மறைந்தும் பாதி மறையாமலும் தெரியும் சந்திர பிம்பத்தைப்போல் கூந்தலில் மறைந்தும் மறையாமலும் தெரிந்த உன் முகத்தைப் பார்த்ததும் நான் கவிஞனாக இல்லையே என்ற வருத்தம்தான் எனக்கு ஏற்பட்டது."

"கேலி செய்யாதீர்கள்..."

"உன்னைத் தாராளமாகக் கேலி செய்யும் உரிமை எனக்கு உண்டோ இல்லையோ?"

"எல்லா உரிமைகளும் உங்களுக்குத்தான் உண்டு. ஏதோ அம்மா என்று ஒருத்தி இருந்தாள். அவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய கண்களில் நீர் பெருகிவிட்டது. மிகவும் பாசத்தோடு அருகில் சென்று மேல் துண்டால் அவளுடைய கண்ணிரைத் துடைத்தான் சத்தியமூர்த்தி. அவன் கண்ணீரைத் துடைத்த பின்னும் விலகிச் செல்லாமல் ஒட்டினாற் போலவே அவனருகில் தயங்கி நின்று கொண்டிருந்தாள் அவள். சிரித்தபடியே அவள் அவன் முகத்தை ஏறிட்டு நோக்கிக் கூறினாள்.

'நீங்கள் இப்படிச் செய்வதற்காகவே நான் இன்னும் கண்ணீர்விட்டு அழ வேண்டும் போல ஆசையாயிருக்கிறது"

"கவலைப்படாதே) உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு இந்தக் கைகள் எப்போதும் தயாராக இருக்கும்" என்று அவளுக்குப் பதில் சொல்லியபோது தான் சொல்லிய வார்த்தைகளின் பொருளாழத்தை நினைத்து மெய்சிலிர்த்தான் அவன். 'நேற்று மாலையில் அந்தப் பையன் கொண்டு வந்து கொடுத்த கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/453&oldid=595700" இலிருந்து மீள்விக்கப்பட்டது