பக்கம்:பொன் விலங்கு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 பொன் விலங்கு

பிரசாதத்தை இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன். உங்கள் கையால் இந்தக் குங்குமத்தை என் நெற்றியில் இட்டு விடுங்கள்" என்று சொல்லி இடுப்பிலிருந்து அந்தப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள் மோகினி. தன் நெஞ்சருகே வந்து மேல்நோக்கி நிமிர்ந்த அவள் முகத்திலிருந்து கமகமக்கும் சந்தனச் சோப்பின் வாசனையை நுகர்ந்தவாறே அவளுடைய அழகிய நெற்றியில் கோவில் குங்குமத்தை இட்டான் சத்தியமூர்த்தி. 'இந்தக் குங்குமம் உன்னுடைய அழகிய நெற்றியில் என்றும் இப்படியே இருக்க வேண்டும்' என்று விளையாட்டாக அவளை வாழ்த்துவதுபோல் அப்போது அவன் கூறினான்.

"நீங்கள் இருக்கிறவரை இந்தக் குங்குமமும் இப்படியே இருக்கும்" என்று உறுதி தொனிக்கும் குரலில் மோகினியிடமிருந்து பதில் வந்தது. நர்ஸ் காபி கொண்டு வந்தாள். ஆஸ்பத்திரிக் காபியை மோகினியும் சத்தியமூர்த்தியும் ஆளுக்குப் பாதியாகப் பருகினார்கள். முதல் நாள் தன் தந்தை மோகினிக்கும் ஜமீன்தாருக்கும் ஏற்படவிருக்கும் உறவைப் பற்றியும் வேறு சில கசப்பான உண்மைகளைப் பற்றியும் தன்னிடம் கூறி எச்சரித்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே மோகினியிடம் சொல்லி எது உண்மை? எதுபொய்? என்று இப்போது அவளையேவிசாரித்துவிடலாமாஎன்று ஒருகணம் எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அடுத்த கணமே மகிழ்ச்சிகரமான இந்த வேளையில் அந்தக் கசப்பான உண்மைகளை அவளிடம் சொல்லி விசாரிப்பதனாலேயே அவள் மனம் வேதனைப்படுமோ என்று நினைத்து, இப்போது அவற்றைப் பற்றி அவளிடம் விசாரிக்காமல் இருப்பதே நல்லதென்று அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று, அவளோ மிகவும் ஞாபகமாக வலந்தசேனையையும் சாருதத்தனையும் பற்றி மறுமுறை சந்திக்கும் போது அவன் தனக்குச் சொல்வதாக ஒப்புக்கொண்டிருந்தகதையை உடனேசொல்லியாகவேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அந்தக் கதையை அவளுக்கு எந்தவிதமாகத் தொடங்கி எப்படிச் சொல்லலாமென்று முதலில் சிறிது தயங்கினான் சத்தியமூர்த்தி. * -- -

வலந்தசேனை என்பவள் உச்சயினி நகரத்தில் பேரழகும் பெருஞ்செல்வமும் நிறைந்திருந்த ஓர் இளம் கணிகை என்று ஆரம்பிக்கலாமா, அல்லது'ஓர் இளம்தாசி என்று ஆரம்பிக்கலாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/454&oldid=595701" இலிருந்து மீள்விக்கப்பட்டது