பக்கம்:பொன் விலங்கு.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பர்த்தசாரதி o 499

விளையாட்டாகப் பேசப்போய் அவன் என்னிடம் பழியாகச் சண்டைக்கு வந்துவிட்டான். நானும் அவனைச்சும்மாவிடவில்லை. உடனே தொடாதே அபாயம் என்ற போர்டைக் கையில் எடுத்துக் காண்பித்தேன் அவ்வளவுதான் ஆள் வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் போய்ச்சேர்ந்தான். இதேபோல் 'டாக் ஷோவுக்கு-நானும், இந்த ராயல் பேக்கரி ரொட்டிக் கடை நாயரும் போயிருந்தபோது ஒரு பெரிய வம்பு வந்து சேர்ந்தது. பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் நாய்களை அணிவகுத்து அந்தந்த பகுதிக்குமேல்-அங்கு உள்ளேயிருக்கும்-நாயின் இனம்-பெயர், வயது, அது எந்தநாய்க் கிளப்பின் பிரதிநிதியாக ஷோவில் கலந்து கொள்கிறது என்பன போன்ற விவரங்களைக் குறிக்கும் அறிவிப்புப் பலகையும் போட்டிருந்தார்கள். ஒரே ஒரு பகுதியில் மட்டும் அங்கு இருக்க வேண்டிய நாய் வெளியே எங்கே கொண்டு போகப் பட்டிருந்ததனாலோ என்னவோ-அந்த நாய்க்குச் சொந்தக்காரி போல் தோன்றிய ஒர் முரட்டு ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி மட்டும் உள்ளே உட்கார்ந்திருந்தாள். மழையினால் போர்டில் நாயின் பெயர் அழிந்து போய் வீலாராணி என்று அந்த நாய்க்கு உடைமைக்காரியின் பெயர் மட்டும் அறிவிப்புப் பலகையில் தெரிந்தது. 'நாயர் இது ரொம்பநல்லவெறைட்டியாயிருக்கும்போல் தெரிகிறது. iலாராணி என்று பெயர் போட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு பெண்மாதிரியே இருக்கிறது பார்த்தீர்களா?' என்று நான் சிரிக்காமல் உடன் வந்திருந்த நாயரிடம் காதருகே சொன்னேன். நாயருக்கோ அடக்க முடியாத சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்துவிட்டது. மனிதர் அந்த இடத்திலே சிரித்துத் தொலைக்கப்போய், அந்தப் பெண்மணி என்னுடைய பயங்கரமான நகைச்சுவை புரிந்து அதன்விளைவாக 'வாட்டு யூ மீன். என்று சீறிப் பாயத் தொடங்கிவிட்டாள். தப்பித்தோம், பிழைத்தோம் என்று நாயரை இழுத்துக்கொண்டு ஒட்டமெடுத்தேன் நான். அதற்கு இரண்டு மூன்று நாளைக்கு முன் இந்த மல்லிகைப்பந்தலில் வழக்கமாக வருடா வருடம் நடைபெறும் ஃபிளவர் ஷோ (மலர்க் காட்சி) ஃபுரூட் ஷோ (பழக்காட்சி) ஆகியவற்றில் அந்தப் பூக்களுக்கும், பழங்களுக்கும் அருகே அவற்றின் பெயரை எழுதி

வைக்க வேண்டும் என்று இந்த ஊர் நகரசபைக் கமிஷனர் என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/501&oldid=595754" இலிருந்து மீள்விக்கப்பட்டது