பக்கம்:பொன் விலங்கு.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 501

கொஞ்சம் தகராறு. நன்றாகத் தமிழ் பேசவோ எழுதவோ வராது. 'செகண்ட் அவென்யூ"வில் பிரபலமான மெடர்னிட்டிஹோம் (பிரசவ ஆஸ்பத்திரி) வைத்து நடத்தி வருகிறாளே-ஒரு இங்கிலீஷ் கார டாக்டர் அம்மாள், அந்த அம்மாளுடைய பிரசவ ஆஸ்பத்திரியில் - உபயோகத்துக்காக “உத்தரவின்றி உள்ளே பிரவேசிக்கக்கூடாது' என்று நான்கு போர்டுகள் வேண்டும் என்று எழுதித் தரச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அந்த நான்கு போர்டுகளையும் எனக்கு வேறு வேலை இருந்ததனால் என்னுடைய 'அலிஸ்டென்டாக வந்திருந்த புத்திசாலியை எழுதச் சொல்லப் போக அவன் நான்கு பலகைகளிலுமே உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதி எடுத்துக் கொண்டு போய் பிரசவ ஆஸ்பத்திரியில் அவர்கள் சொன்ன இடங்களில் எல்லாம் ஆணியடித்து மாட்டிவிட்டு வந்து விட்டான். இரண்டு நாள் கழித்து மூஞ்சியில் எறியாத குறையாகப் போர்டுகளைத் திருப்பிக் கொண்டு வந்து எறிந்து விட்டுப் போனாள் அந்த இங்கிலீஷ் டாக்டரம்மாளுடைய நர்ஸ். என்னடா சங்கதி என்று போர்டுகளைப் பார்த்தால் படுபாவிப்பயல், 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதிப் பிரசவ ஆஸ்பத்திரியின் பிழைப்பிலேயே மண்ணைப் போட்டிருக்கிறான். முதல் வேலையாகப் பையனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்" என்று தன்னுடைய அநுபவத்தை மிகவும் இரசித்துச் சொன்னான் குமரப்பன்.

கடையைப் பூட்டிய பின் நண்பர்கள் தேநீர் பருகிவிட்டு அறைக்குப் போனார்கள். மழையினால் எங்கும் வெளியில் உலாவப் போக முடியவில்லை. பேசிக்கொண்டிருந்தபோது நடுவில் மோகினியைப் பற்றி விசாரித்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் அந்தரங்கத்திலோ-அவளைப் பற்றிய கவலைகளும் தவிப்புமே நிரம்பியிருந்ததனால் யாராவது மோகினியைப் பற்றி ஞாபகப்படுத்திப் பேசினால்கூட வேதனையாக இருந்தது அவனுக்கு. சிறிது நேரம் தயங்கிய பின் மதுரையில் நடந்தவற்றைப் பற்றிய விவரங்களைக் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி, எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் சிறிது நேரம் மலைத்தாற்போல் உட்கார்ந்திருந்தான். அப்புறம் சற்று நேரத்துக்குப் பின் ஒரு பெருமூச்சையும் விட்டுவிட்டு வெளிப்படையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/503&oldid=595756" இலிருந்து மீள்விக்கப்பட்டது