பக்கம்:பொன் விலங்கு.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 549

விஷயத்தையும் சுயமாக சிந்தித்து எதிர்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துவதற்காகச் சத்தியமூர்த்தி தன் வகுப்புகளில் அடிக்கடி விளக்கமாகச் சொல்கிற உவமை ஒன்று உண்டு.

"படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றதுதான். எந்தப் பிரச்சினையோடு உராய்ந்தாலும் அப்படி உராய்வதன் காரணமாகவே சிந்தனைச் சுடர் புறப்படுகிறது. 'அறிவுப் புரட்சி என்பது புத்தக அறிவை எல்லா இடங்களிலும் பரப்பிவிட முயல்வது மட்டுமன்று. ஒவ்வொருவருடைய கஷ்ட நஷ்டங்களையும் மற்றொருவர் அறிந்து உணர்ந்து மனம் நெகிழ்கிற சூழ்நிலையை உண்டாக்கி விட்டாலே அறிவில் புரட்சி விளைந்தாற் போலத்தான். இத்தகைய அறிவுப் புரட்சியால் சுயமரியாதைக்கும் மானாபிமானத்துக்கும் கூட இழுக்கு வரமுடியாது. மானாபிமானம் என்றால் தன்மானத்தின் மேல் அபிமானம் இருந்து மட்டும் பயனில்லை, நம்முடைய எல்லா அபிமானங்களிலும் கூட மானமிருக்க வேண்டும். மானமில்லாத அபிமானங்கள் வாழ்க்கைக்கே களங்கம்' என்பார் அவர். 'அப்படிப்பட்டவருடைய மானத்துக்குப் பங்கம் உண்டாக்கி அவமானப்படுத்திவிட வேண்டுமென்றல்லவா இந்தக் கல்லூரி முதல்வரும் ஜமீன்தாரும் இப்போது இப்படிச்சூழ்ச்சி செய்கிறார்கள்? என்று நினைத்தபோது அந்த நினைப்பைத் தாங்கிக் கொள்வதற்கே பொறுமையின்றி, வேதனைப்பட்டாள் அவள்.

சத்தியமூர்த்தியை அரெஸ்ட் செய்துகொண்டு போய் ஜாமீனில் விடுவித்த தினத்துக்கு மறுதினம் காலையில் கல்லூரி வேலை நிறுத்த நிலைமை இன்னும் தீவிரமாகியது. சத்தியமூர்த்திக்கு உடந்தையாயிருந்ததாகவும், வேலை நிறுத்தம், தீ வைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட மற்ற மாணவர்களைத் தூண்டியதாகவும் பொய்க்குற்றம் சுமத்தி ஏற்கெனவே வேறு காரணங்களால் அவருக்குப் பிடிக்காத சில மாணவர்களைக் கல்லூரியிலிருந்து 'டிஸ்மிஸ் செய்திருந்தார் முதல்வர். நோட்டீஸ் போர்டில் இதை அறிவிக்கும் முதல்வருடைய அறிக்கை தொங்கியது. இதனால் வேலை நிறுத்த நிலைமை தீவிரமாகவே கலெக்டருக்குத் தந்திகள் பறந்தன. ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக மல்லிகைப் பந்தலில் முகாம் செய்து நிலைமையை நேரில் கண்டறியுமாறு அரசாங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/551&oldid=595808" இலிருந்து மீள்விக்கப்பட்டது