பக்கம்:பொன் விலங்கு.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 பொன் விலங்கு

கவனமாக விழித்துக்கொண்டிரு. தூங்கிப்போய் விடாதே. ஜமீன்தாரும் கண்ணாயிரமும்தானே உன் தந்தையைக் காரில் இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டுப் போனார்கள்! நான் கடையிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். திரும்பிப் போகிற போதும் அதே கார்தானே வந்து அவரை ஏற்றிக் கொண்டு போகிறது?" என்று குமரப்பன் சத்தியமூர்த்திக்கு விவரத்தைக் கூறி எச்சரித்துவிட்டுப் போனான்.

முதன் முதலாகத் தான் வேலை பார்க்கிற ஊருக்குத் தந்தை தன்னைத் தேடிவர நேர்ந்து அதுவும் இப்படி அரைகுறைச்சந்திப்பாய் ஆகி முறிந்து போய் விட்டதே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சக வலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமை யையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்திருந்தான். சில நாட்களாக அவன் மனம் ஒய்வு ஒழிவில்லாத எண்ணப் போராட்டங்களில் மூழ்கியிருந்தது. நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரிதான் என்ற மனப்பான்மை யோடு தன்னை மட்டும் தப்பித்துக்கொள்ள விரும்பாமல், எல்லாருடைய நியாயத்துக்காகவும் பொறுமையோடு காத்திருந்தான் அவன். பொறுமையிழந்து மனம் கொதித்துக் குமுறும்படியான சோதனைகள் எல்லாம் வந்தன. அளவற்றுத் துன்பப்பட நேர்ந்த சமயங்களில் எல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு ஓடிவிட மட்டும் தவிக்கிற சமுதாயக் கோழையாக இருந்து விடாமல் அவன் மிக நிதானமாகச் சிந்தித்திருக்கிறான். இன்றும் அதே நிதானத்தோடுதான் இருந்தான் அவன். தன்னிடம் தந்தை கையெழுத்துப் போடச் சொல்லி நீட்டியதாளைக்கிழித்தெறிந்த மறுகணமே தான் சற்றே நிதானம் தவறி ஆத்திரப்பட்டு விட்டோமோ என்று உணர்ந்து அவனால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை. தந்தை வந்ததும், இரைந்ததும் முடிவில் கோபத்தோடு திரும்பிப் போனதும்-குமரப்பன் விசாரித்துவிட்டுச் சென்றதற்கு அப்புறம்கூட நெடுநேரம் அவன் நினைவைக் கலக்கிக் கொண்டிருந்தன. பொழுது சாய்கிறநேரத்துக்குள் குமரப்பன்கடையை அடைத்துக்கொண்டு மேலே வந்தபின் நண்பர்கள் இருவரும் லேக் அவென்யூ-கடைவீதி வழியாக உலாவப் புறப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/574&oldid=595833" இலிருந்து மீள்விக்கப்பட்டது