பக்கம்:பொன் விலங்கு.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 575

வீதியில் ஓடிப்போய் விரைந்து நடந்து கொண்டிருக்கும் சத்தியமூர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து, தெய்வமே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதற வேண்டும் போலத் தவித்தது அவள் உள்ளம். ஆசைப்பட வைக்கும் அந்தப் பாதங்களில் ஒடிப்போய் வீழ்ந்து கதற வேண்டுமென்று அவள் நினைத்த அதே சமயத்தில் முன்புறம் நின்ற ஜமீன்தார் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவளை உள்ளே தள்ளிக்கொண்டு போய்விட்டார்.

பட்டு ஜவுளிக்கடை வாசலை ஒட்டி நடந்தபோது அவள் தன்னைப் பார்த்துவிட்டாள் என்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் அவன் வேகமாக நடந்து கடையைக் கடந்துவிட்டான். அவன் மனத்தின் ஒரு பகுதி அவளுடைய துயரங்களை நினைத்து மெளனமாகக் கலங்கி அழுது கொண்டிருந்தது. இன்னொரு பகுதி அவள் இப்படியெல்லாம் ஜமீன்தாருடைய கைப்பாவையாகஅவருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இயங்குவ்தைப்பற்றி நினைத்து நினைத்து உள் நெருப்பாய் குமுறிக்கொண்டிருந்தது. அவள் மேல் அளவுகடந்த பிரியமும் நம்பிக்கையும் வைத்துவிட்டகாரணத்தினால் அவள் இன்னொருவனுக்கு அடிமைப்படுகிறாள் என்று தெரிகிறபோதெல்லாம் மனம் குமுறினான் சத்தியமூர்த்தி. யார் மேலும் மனம் வைத்து அன்பு செய்யாத வரை நாம் இன்னொருவருக்காகக் கவலைப்பட்டுக் கலங்கி அழவேண்டியதில்லை. மனம் வைத்து அன்பு செய்ய ஆரம்பித்துவிட்டால் அந்த அன்புக்கு ஆளாகிறவரைப் பற்றிய கவலைகளையும் நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. அதிக அன்பு செய்கிறவன் அதிகமாகக் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. மோகினியைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் மெளனமாக நடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் உடன் சென்ற குமரப்பன் மெல்லப் பேச்சுக் கொடுத்தான். -

'மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்திருப்பது உனக்கே இப்போதுதான் தெரியுமா சத்தியம்?" - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/577&oldid=595836" இலிருந்து மீள்விக்கப்பட்டது