பக்கம்:பொன் விலங்கு.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 பொன் விலங்கு

என்று மோகினியைக் கேட்டுவிடக்கூடப் பாரதியின் நாவு துடிதுடித்துக் கொண்டிருந்தது. ஆனால் மோகினியின் கலைத் திறனாலும் அழகுப் பெருமையினாலும் அவள் மேல் தன்னை யறியாமலே பாரதிக்கு உண்டாகியிருந்த ஒருவிதமான பயபக்தி அப்படிக் கேட்கவும் துணியவிடாமல் அவளைத் தடுத்து விட்டது. 'அவரைப்பற்றி இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என்று மனம் துண்டித் தூண்டிக் கேட்க மனத்தின் அந்தக் கேள்வியை உள்ளேயே இரகசியக் குரலாகப் புதைத்துவிட்டு வாய் வார்த்தைகளால் மோகினி கேட்பதற்கெல்லாம் இயந்திரம்போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பாரதி. - -

பேச்சு முடிந்து படுத்துக்கொள்ளச்சென்றபின்போ இருவருமே உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பலகணிகளின் வழியே தோட்டத்தில் அவசர அவசரமாக முன்னிரவிலேயே மலர்ந்து விட்டிருந்த பவழமல்லிகைப் பூக்கள் நறுமணம் அறைக்குள் வந்து கமழ்ந்து கொண்டிருந்தது. பலகணிக்கு அப்பால் மலைப் பிரதேசத்தின் மங்கிய வானத்தில் எங்கோ ஒரு மூலையில் கீறிவிட்டாற்போல் பிறை நிலா நகர்ந்து கொண்டிருந்தது. மெளனமாக மெல்ல நகரும் அந்தப் பிறை நிலாவும், மந்த மாருதம் போன்ற மெல்லிய காற்றின் சிலுசிலுப்போடு கலந்து அறைக்குள் வந்து நிறையும் பவழமல்லிகைப் பூக்களின் மணமும் சேர்ந்து மோகினியின் இதயத்தில் தாபத்தைப் பெருக்கின. முன்தினம் மாலையில் பட்டுப்புடவைக் கடையின் வாசலில் சத்திய மூர்த்தியைச் சந்தித்தபோதே அவள் தவித்த தவிப்பு இப்போது பன்மடங்காகப் பெருகியிருந்தது.

வாய்விட்டுக் கேட்கவும் முடியாமல் தானாகத் தெரிந்து கொள்ளவும் வழி இல்லாமல் தவித்த உண்மை தெரிந்து விட்டதென்று களிப்பும்-அந்தக் களிப்பின் மறுபுறமான வேதனைகளும் நிறைந்த மனநிலையோடு படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மோகினி. சத்தியமூர்த்தியின் பாதங்களை நினைத்தபோது ஆரார் ஆசைப்பட்டார் நின் பாதத்துக்கு, என்ற முத்துத்தாண்டவர் பதத்தைத் தான் உணர்ச்சி மல்க ஆடிய வேளைகளும் மேடைகளும், ஞாபகம் வந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/596&oldid=595857" இலிருந்து மீள்விக்கப்பட்டது