பக்கம்:பொன் விலங்கு.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 பொன் விலங்கு

போட்டுக்கொண்டு சாப்பிடவும் முடியாமல், யாரிடமும் கேட்கவும் கூசிக்கொண்டு அந்த இரவில் சத்தியமூர்த்தியின் தந்தை தவிப்பதை மோகினி குறிப்பாகப் புரிந்துகொண்டாள். மோகினி தன் மனத்தினுள்ளே அரும்பியிருக்கும் ஓர் அந்தரங்கமான பற்றுதலுடன் தானே இலையை எடுத்துப்போட்டுப் பரிமாறிவிட்டு அந்தக் கிழவரைச் சாப்பிட உட்காருமாறு அழைத்தபோது, அவர் கூச்சமும் பயமுமாகத் தயங்கினார்.

'உங்களுக்கு எதுக்கம்மா இந்த சிரமம்? நீங்க ஜமீன்தார் ஐயாவைக் கவனியுங்க...யாராவது வேலைக்காரங்க வந்தப்புறம் நான் ஒரு வாய் கேட்டு சாப்பிட்டுகிட்டாப் போகுது' என்று பதறினார்.அவர். 'என் அன்பரின் தந்தைக்கு நானே இலைபோட்டுப் பரிமாறப் போகிறேன் என்ற பெருமிதத்தோடு அவரை வற்புறுத்தி இலையில் உட்காரச் செய்து மேலும் தொடர்ந்து பரிமாறினாள் மோகினி. ஜமீன்தார் வலிந்து கூப்பிட்டனுப்பினாலும் அவர் உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாயிருக்கும் அறைக்குள் எட்டிப் பார்க்கக்கூட மறுத்து வெறுப்பும் அலட்சியமும் காட்டுகிற இந்தப் பெண் இன்று இருந்தாற் போலிருந்து திடீரென்று-நம்மை மட்டும் வற்புறுத்தி அழைத்து இலைபோட்டுப் பிரியத்தோடு பரிமாறுகிற காரணம் என்ன? என்று புரியாமல் பயம் கலந்த மகிழ்ச்சியோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவருக்குப் பரிமாறி முடிந்ததும் தானும் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் செய்தபின் பாரதிக்காகக் கஞ்சியை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குள் போனாள் மோகினி. கஞ்சியை ஆற்றிக்கொண்டே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள் அவள். -

"கடிதத்தை அவர் படித்துப் பார்த்தாரா பாரதி' "அவர் உங்கள் கடிதத்தைப் படித்துப் பார்க்கத் தொடங்குகிற - வரை நானும் அவரோடுகூட இருந்தேன் அக்கா அப்புறம் எனக்குக் காலேஜுக்கு நேரமாகிவிட்டதால்-கடைசிவரை காத்திருந்து அவர் என்ன பதில் சொல்லுகிறாரென்று கேட்டுக்கொண்டு வர முடிய வில்லை" என்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/614&oldid=595878" இலிருந்து மீள்விக்கப்பட்டது