பக்கம்:பொன் விலங்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - பொன் விலங்கு

நிறைய முகப்பெளடரும், சந்தனமும், சாதிப் பூக்களும் கம்மென்று மணக்கத் தொடங்கியிருந்தன. சத்தியமூர்த்தி மேலும் அந்த உரையாடலைத் தொடர்ந்து கவனித்தான்.

'உன் மனசிலே நீ என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கியோ? தெரியலை.சின்னஞ் சிறு கிராமத்திலே அம்மன் கோவில் திருவிழாவுக்கு நாலு விதமான மனுசாளும்தான் வந்திருப்பாங்க. ஒருத்தருக்குப் பாம்பாட்டி நடனம் பிடிச்சிருந்தா இன்னொருத்தருக்கு 'மயில்டான்ஸ் தான் பிடிக்கும். யார் மனசும் குறைப்படாமேதான் நடந்துக்கணும்.கால்லே சலங்கையைக் கட்டிக்கிட்டு இதுக்குன்னு பெறந்து வளர்ந்தப்புறம். அதெல்லாம் பார்த்தா முடியுமா?"

"அதெல்லாம்னா...எதெல்லாம்?" "உன் திமிர் பிடிச்ச கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஆள் இல்லேடீம்மா."

"அம்மன் கோவில் திருவிழா நடத்தற மனுசங்களா இவங்க...? நிஜமா அம்மனைக் கும்பிட்டுத் திருவிழா எடுக்கிறவங்களா இருந்தால் பெண்களைத் துச்சமா மதிக்கிற சின்னநினைப்புத் தோணுமா இவங்களுக்கு? ஒருத்தன் உதடு ரெண்டையும் குவிச்சு 'ஹுய்’னு சீட்டியடிக்கிறான். இன்னொருத்தன் கண்ணைச் சாய்க்கிறான். அந்தக் கண்ணிலே கொள்ளியைத்தான் வைக்கணும்..." -

"இப்படி வாய்த் துடுக்கு இருக்கப்படாது.டீ உனக்கு." "ஏன்?...இருந்தா என்னவாம்?" “சீக்கிரமா அழிஞ்சு இருந்த எடம் தெரியாமப் போயிடுவே!" "அப்படிப் போயிட்டா உனக்கே சந்தோஷம் தானே?..." 'இருந்து இப்படி என் கழுத்தை அறுக்கிறத்துக்குப் பதில் அதையாவது செய்யலாம் நீ..." -

எதிர்தரப்பிலிருந்து இதற்குப் பதில் இல்லை. வளைகளும் சலங்கைகளும் மெல்லக் குலுங்கியபின் சிறிது நேரம் கழித்து விசும்பியழுகிற இளங்குரல் எழுந்தது. அந்தக் குரல் விசும்பி யழுவதுகூட மிகவும் நயமானதோர் இன்னிசையாக உருவாகி ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/64&oldid=595906" இலிருந்து மீள்விக்கப்பட்டது