பக்கம்:பொன் விலங்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 63 'பேசறதையும் பேசிப்பிட்டு ஏதுக்குடி இந்தச் சாகஸம்?" இந்தக் கேள்விக்கும் எதிர்த்தரப்பிலிருந்து பதில் இல்லை, அழுகைக் குரல் பெரிதாகியது.

'பெரிசா அழுதுட்டாப்பிலே ஆச்சா? நீ பெறந்த பெறப்புக்கு ரோஷம் என்னா வேண்டிக் கெடக்கு? பேசின தொகைக்கு ஒழுங்கா ஆடிப்பிட்டு வரணுமா, இல்லையா?"

'அப்படி ஆடறத்துக்கு நா ஒண்னும் தெருக் கூத்துப் படிச்சுக்கலை. இது சரசுவதியோடஇலட்சணம்’னு சொல்லியிருக்காரு வாத்தியாரு...' என்று அழுகையோடு குமுறிக் கொண்டு பதில் பேசியது இளங்குரல்.

திடீரென்று முதியவளிடமிருந்து சத்தியமூர்த்தியே இரண்டாவது முறை நினைக்கக் கூசும்படி துச்சமான வார்த்தை ஒன்று வெடித்தது. மேலே ஒருவன்படுத்திருப்பதை மறந்து தாங்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு வார்த்தைகளைத் தடிக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதியவள் நெருப்பாய் விட்டெறிந்த அந்த ஒரு வார்த்தை இளையவளிடம் விளைவித்த ஆத்திரம் அடக்க முடியாததாக இருந்தது.இப்போது சத்தியமூர்த்தி எழுந்து உட்கார்ந்து கீழேதலையை நீட்டிப் பார்க்க வேண்டியதாயிற்று. பார்த்த கண்களுக்கு விருந்தாகத் தாமரை பூத்தாற்போன்ற அந்த முகம்தான் முதன் முதலாக அவனுக்குத் தோன்றியது. வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்த் தெரிந்தாள் அந்தப் பெண். காலில் நாட்டியத்துக்காகக் கட்டிக் கொண்டிருந்த சலங்கைக் கொத்துக்களை அறுத்தெறிந்து விட்டு, "நான் விழுந்து செத்தால்தான் உனக்கு என்னைப் புரியும்..." என்று இரயில் கதவைத் திறந்துகொண்டு பாயத் தயாராகிவிட்டாள் அந்த இளம் பெண். இனியும் தான் மேலேயிருந்து சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதத் தன்மையில்லை என்று படவே சத்தியமூர்த்தி கீழே இறங்கி அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றான். அவனைக் கண்டவுடன் தங்கள் இருவரைத் தவிர மூன்றாவதாக ஆண்பிள்ளை ஒருவன் அந்த வண்டியில் இருக்கிறான் என்பதை அறிந்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவனைக் கண்டு அந்த இளம் பெண்தான் அதிகக் கூச்சமடைந்தாள். அவளை அரட்டி மிரட்டிக் கொண்டிருந்த முதியவள் அதிக வெட்கமோ கூச்சமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/65&oldid=595917" இலிருந்து மீள்விக்கப்பட்டது