பக்கம்:பொன் விலங்கு.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 - பொன் விலங்கு

மனிதனுடைய மனத்தைப் பிணிக்கும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்கும் போலும் என்று இந்த விநாடியில் அவனும் தனக்குத்தானே உணர்ந்தாக வேண்டியிருந்தது.

'ஆண் பிள்ளைகளின் வீரத்தையும், தன்மானத்தையும் அழிக்கிற அழகுகள் உலகத்துக்கு எந்த லாபத்தைத் தர முடியும்? கிரேக்க நாட்டு ஹெலனின் அழகிலே ஆயிரம் கப்பல்கள் பாய் விரித்துப் பறக்கத் தூண்டும் கட்டளைக் கவர்ச்சி இருந்ததாம். எகிப்திய அழகி கிளியோ பாத்ரா சீலரைச் சீரழித்தாள். ஹெலன், கிளயோபாத்ரா, சீதை, நூர்ஜஹான், மும்தாஜ், அகல்யை, அனார்க்கலி ஆகியவர்களின் இணையிலா அழகினால், ஆண்பிள்ளைகள் பலர் பிரச்சினைக்குரியவர்களாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர் களாகவும் ஆகி அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள்' என்றே நினைத்தான் அவன். அந்த நினைப்பு நீங்குவதற்குள்ளாகவே மோகினியின் உடலழகைக் காட்டிலும், மனத்தின் அழகைத்தான் நான் அதிகமாக விரும்பினேன். அந்த மன அழகே பொய்யாய்ப் போனபின் நான் அவளை நினைத்துத்தான் என்ன பயன்?' என்று கழிவிரக்க ஞாபகமும் அவனுக்கு உண்டாயிற்று. அவளை இப்போது நம்பிக்கைத் துரோகியாகப் புரிந்துகொண்டு விட்டான் அவன். ஒரு காலத்தில் அவன் அவளுடைய உயிரைக் காப்பாற்றினான்; அவளோ தன்னுடைய நம்பிக்கையைக்கூடக் காப்பாற்றாமல் துரோகம் செய்து விட்டாளென்று இன்று அவனுக்குத் தெரிந்தது. இப்படித் தனக்குத்தானே குமுறும் மனக் குமுறல்களையெல்லாம் அடக்கிக்கொண்டு புறத்தே அமைதியாக இருப்பது போலவும் இயல்பாக இருப்பது போலவும் நடமாடிக் கொண்டிருந்தான்சத்தியமூர்த்தி, ஏமாற்றத்தையும் துரோகத்தையும் அருகருகே சந்திக்கும்போது அவற்றை விட்டு விலகி ஓடிவிட வேண்டும் போலத் தவிக்கும் இயற்கையான மனத்தவிப்புக்கு ஏற்றாற்போல வெளிநாட்டுப் பயணம் வந்து வாய்த்திருந்தது. தன்னுடைய உண்மைத் திறனையும் நேர்மை இலட்சியங்களையும் மதிக்கத் தெரியாத ஒரு கல்லூரி நிர்வாகத்தையும், செளகரிய முள்ளவர்களுக்கு எப்படியாவது அடங்கி ஒடுங்கிப் பணிவதுதான் சொகுசான வாழ்க்கை என்று நினைக்கும் ஒரு தகப்பனையும், செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/652&oldid=595920" இலிருந்து மீள்விக்கப்பட்டது