பக்கம்:பொன் விலங்கு.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 பொன் விலங்கு

கொண்டிருந்தாள். படிக்கிற மாணவர்கள் பதவியை விட்டுப் போகும் ஆசிரியருக்குக் கொடுக்கும் விருந்துபசாரம் என்ற முறையில் சத்தியமூர்த்தியின் மாணவியாகிய பாரதி அங்கு வந்திருந்தாலும், நிர்வாகத்தோடு பகைத்துக் கொண்ட ஓர் ஆசிரியரைக் கெளரவிக்கத் தன் தந்தை இறந்து அதிக நாளாகாத அந்த நிலையிலும் அவள் வந்திருக்கிறாள் என்பதே பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளோ, பிரிவுபசார விருந்துக்கு வருவது போல் வந்திருந்தாலும் சத்தியமூர்த்தியைச் சந்தித்துப் பேச வேண்டிய அவசரமான காரியமும் அவளுக்கு இருந்தது. அவள் இந்தப் பிரிவுபசார விருந்துக்காக வீட்டிலிருந்து புறப்படும்போது ஜமீன்தார்பேச்சுவாக்கில் அவளிடம் "நாங்கள் இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குள்ளாரப் புது வீட்டுக்குப் போயிடறோம் அம்மா! நீ அந்தப் படத்தை எடுத்தெறிஞ்ச மாதிரியே ஆளையே எடுத்தெறிஞ்சாலும் எறிஞ்சிடுவே. உங்கிட்ட எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு' என்று வேடிக்கையாகத் தொடங்குவது போல் தொடங்கிக் குத்தலாகச் சொல்லிக் காண்பித்திருந்தார். படத்தைத் தான் எடுத்தெறிந்தது பற்றிக் கண்ணாயிரம் ஜமீன்தாரிடம் கோள் மூட்டியிருக்கவேண்டும் என்று அப்போதுதான் பாரதிக்குப் புரிந்தது. -

வெளிப்படையாக மோகினியின் மேல் தான் அநுதாபப் படுவதைக் காண்பித்துக் கொண்டால், "எனக்கில்லாத அக்கறை உனக்கென்ன வந்தது? அவளுக்குப் பரிந்து பேச நீ யார்?' என்று ஜமீன்தார் முரட்டுத்தனமாகத் தன்னை எதிர்த்துக் கேட்பாரே என்று நினைத்து அவரிடம் மோகினி விஷயமாக எடுத்துச் சொல்லத் தயங்கினாள் பாரதி. அதே சமயத்தில் மோகினியை நிராதரவாக விட்டுவிடவும் அவளுக்கு மனமில்லை. இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்தபின் அன்று நடக்கும் பிரிவுபசாரக் கூட்டத்தின் முடிவில் எப்படியும் சத்தியமூர்த்தியைச் சந்தித்து, 'மோகினியை கைவிட்டு விடாதீர்கள் அவள் புனிதமானவள். அவளைக் காப்பாற்றுங்கள்' என்று வேண்டிக் கொள்ள எண்ணியே அங்கு வந்திருந்தாள் பாரதி. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. மாலை ஆறரை மணிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/660&oldid=595929" இலிருந்து மீள்விக்கப்பட்டது