பக்கம்:பொன் விலங்கு.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 661

அது. அவர்கள் சாவியினாலேயே தாழ்ப்பாளைத் திறந்து விடுவார்களோ என்று அவள் பயந்தாள். பயந்தபடியே நடந்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே பாய்ந்த கண்ணாயிரம் எரிமலையாகச் சீறி இரைந்தார். -

"நீ உன் மனசில் என்னதான் நினைச்சிருக்கே ஜமீன்தாரு...எவ்வளவு பெரிய மனுஷன். தனியா ரெண்டு வார்த்தை பேச வந்தார்னா சந்தோஷமாப் பேசி அனுப்பாமே.. காறித் துப்பினியாமே? ஆடறது கூத்துன்னாலும் போடறது பத்தினி வேஷம்னானாம்......" *

அவ்வளவுதான், இதைக் கேட்டு அதுவரை பொறுமையா யிருந்தமோகினி பத்திரகாளியானாள். "கண்ணாயிரம்' என்று அவள் உரக்க ஒலித்த சீற்றக் குரலில் அந்த வீடே அதிர்ந்தது. பாதிக் கோழைத்தனமும், பாதிப் பயமும் உள்ள அந்தசாதுப்பெண்தன்னைப் பதிலுக்கு இரைந்து கோபிக்க மாட்டாள் என்றெண்ணியிருந்த கண்ணாயிரம். அவள் எதிர்பாராமல் போட்ட கூப்பாட்டினால் அப்படியே திகைத்துப் போய் நின்றார். "வேளைக்கு ஒருத்தியைப் பெண்டாள வலைவீசும் உங்களையும் ஜமீன்தாரையும் போன்ற சண்டாளர்களைப் பெற்ற குலமே பத்தினிக் குலமானால் பிறந்த குலத்தைத் தவிர வேறு பிழைசெய்தறியாத நானும் பத்தினிதான். இந்த நாசகாரச் சமூகத்தில் நீங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள். நானோ கூத்தாடுகிறவள். குலத்தில் பிறக்காதவள். மானம் கெட்டவரே! என்னைக் குறை சொன்னால் உம் நாக்கு அழுகிப் புழு நெளியும்." என்று உணர்ச்சி வசப்பட்டுக் குமுறி மண்டை வெடித்துவிடும் போல இரைந்து கத்திய அவளை ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கன்னத்தில் ஓங்கி அறையப் பாய்ந்துவிட்டார் கண்ணாயிரம். மோகினி அவர் தன்னை அறையப் பாய்ந்து வருவதைப் பார்த்துச் சிறிதும் நகரவோ ஓடவோ விலகவோ இல்லை. தன்னுடைய நினைவின் புனிதத்துவம் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையோடு கம்பீரமாக நிமிர்ந்து பார்த்து நெருப்பாய் ஜொலித்துக் கொண்டு நின்றாள். அவள் நின்ற கம்பீரத்தில் ஒடுங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/663&oldid=595932" இலிருந்து மீள்விக்கப்பட்டது