பக்கம்:பொன் விலங்கு.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 பொன் விலங்கு

கடைசிவரை காப்பாற்றி விட்டாள். இன்னொருவருடைய கைப்படுவதற்கு முன் தானாகவே மண்ணில் உதிர்ந்து தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடுகிற பவழ மல்லிகைப் பூவைப்போல் உதிர்ந்து போய்விட்டாள். நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்துச் சந்தேகப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்துக் கொள்ளாமல் அக்கா புழுவாய்த் துடித்துப் போனாள். உலகமே கசந்துபோய் மறுபடி விழித்து எழுந்திருக்க விரும்பாத பெருந்துக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்; இனி வருந்தி என்ன பயன்? நீங்கள் ஆண் பிள்ளை எங்கோ வெளிநாட்டுக்குப் போகிறீர்கள், புதிய புதிய அநுபவங்கள் ஏற்பட்டு உங்களுடைய ஞாபகத்திலிருந்து மோகினி அக்காவைப் பற்றிய நினைவே மங்கினாலும் மங்கிவிடும்..." என்றாள். . . ;

"தயவு செய்து அப்படிச் சொல்லக் கூடாது அவளை நான் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது பாரதி நான் மறக்க முடியாதபடி என் கையில் ஒரு பொன் விலங்கு போட்டுப் பிணித்துவிட்டுப் போயிருக்கிறாள் அவள். இனி என்னுடைய இந்த வலது கையில் மானசீகமாய் இன்னொரு கையும் நிரந்தரமாகப் பிணைந்திருக்கிறது. எனக்கு ஏற்கெனவே மணமாகி அந்த மணத்துக்கு நாயகியை இன்று நான் பறிகொடுத்து விட்டேன் என்ற ஞாபகம் கையிலிருந்து பிரித்தெடுக்க முடியாத இந்த மோதிரம் உள்ளவரை மாறாது. இந்தக் கைக்கு இனி இந்த மோதிரம் ஒரு தடை ஏனென்றால் மோகினி வாழ முடியாமல் போன வாழ்க்கையை வாழ்வதற்காக எந்தப் பெண்ணும் இனிமேல் இந்தக் கையைப் பற்ற முடியாமல் இந்த மோதிரம் தடுத்துக் கொண்டேயிருக்கும். என் வாழ்வில் இனி இது ஒரு தவம். நான் டில்லிக்குப் போய்த் திரும்புமுன்மோகினியிடமிருந்து நீங்கள் வாங்கி அனுப்பிய கடிதம் மதுரைக்குக்கிடைத்திருக்கிறது. ஆனால் என்தந்தை அதை வாங்கி கோபத்தோடு அடுப்பில் கிழித்தெறிந்திராவிட்டால் மோகினி ஜமீன்தாரை இரகசியமாக மணந்து கொண்டுவிட்டாளென்று சந்தேகப்பட்டு அவளை நான் வெறுக்க நேர்ந்திருக்காது" என்று கண்கலங்கிப்போய் அழுகை தொனிக்கும் குரலில் பாரதிக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. பாரதியும் கண்கலங்கினாள். பேசிக் கொண்டே மயானத்துக் கிளைச்சாலையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்தார்கள் அவர்கள். "வீட்டுக்கு வாருங்கள், காலையில் மதுரைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/682&oldid=595953" இலிருந்து மீள்விக்கப்பட்டது