பக்கம்:பொன் விலங்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73

வாங்கிக்கொண்டு வரவேண்டுமென்று தோன்றாதா? உலகத்து வழக்கமே பிடிபடாத பிள்ளையாக இருக்கிறாயே அப்பா' என்று அம்மா வழக்கமாகக் குறைபட்டுக் கொள்வது உண்டு. இன்றும் அப்படிக் குறைபட்டுக் கொள்வதற்கேற்ற சூழ்நிலையில் தான் வீடு திரும்பும் அவனுக்கே புரிந்தது.

'பசையைப்போல் அநுபவத்தில் ஒட்டிக் கொண்டுவிட வேண்டிய சிலவிதமான வாழ்க்கை ஆர்வங்கள் என்னிடம் இல்லை. உறவினர்களைக் கண்டால் நான் அதிகமாகக் கலந்து பேசிப் பழகுவதில்லை' என்று அப்பா குறைபடுகிறார். தங்கைகளுக்கு அடிக்கடி ஏதாவது வாங்கிக்கொடுத்து வெளிப்படையான பிரியத்தை என்னால் காண்பிக்க முடியவில்லையே என்று அம்மா என்மேல் வருத்தப்படுகிறாள். தெருவில் சந்தித்தால் நின்று பேசிக் கலகலப்பாகப் பழகத் தெரிவதில்லை. முரட்டு ஆளாக இருக்கிறான் என்று கண்ணாயிரத்தைப் போல் உள்ளவர்கள் என்னைப்பற்றிக் குறை சொல்கிறார்கள். மொத்தத்தில் பலர் எதிர்பார்க்கிற சில குணங்கள் என்னிடம் இல்லை. இதில் மாறுதல் விளைய வேண்டியது என்னிடமா, மற்றவர்களிடமா என்பதுதான் முடிவாகத் தீர்மானமாக வேண்டிய காரியம்,

'நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும் விநயமாகவும் பேசுவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று வேறொரு விதமாக அவனிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி. அதையும் இப்போது நினைத்தான் அவன்.

எல்லாவற்றையும் மொத்தமான அபிப்பிராயத் தொகுப்பாக ஒன்று சேர்த்துப் பார்த்தால் எப்படி எப்படியோ மாறவேண்டுமென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன விளைவை எதிர்பார்த்து அப்படி மாற வேண்டும் என்றுதான் புரியவில்லை. பிறருடைய செளகரியங்களை உத்தேசித்துத் தானே தன்னை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் கோழையாக வாழப் பழகவில்லை அவன். பிறரை மாற்றுகிற தீரர்களில் ஒருவனாக வாழ ஆசைப்படுகிறவனின் ஆரம்பம் இப்படித் தான் இருக்க முடியும் என்பதுபோல இருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/75&oldid=595969" இலிருந்து மீள்விக்கப்பட்டது