உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 பொய்ம் முகங்கள் தாம் உருப்படியாகப் பாடம் நடத்த வேண்டிய நேரத் தையே விண்ாக்கிவிட்டுப் பெண்பிள்ளைகள் குனிவது, நிமிர் வதையும், ஒடுவதையும், கைவீசுவதையும் பார்க்கிற நைப்பாசையில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவர், அடுத்த வர்களுக்கு உபதேசிப்பதற்கு என்ன யோக்கியதை இருக் கிறது: ' . . . . ஆறாவது ஃபாரம் ஏ பிரிவு வகுப்புக்குள் அவன் துழைந்ததும் மாணவர்கள் எழுந்துநின்றார்கள். அவர்களை உட்காரச் சொல்லிக் கையமர்த்திவிட்டுத் தானும் நாற்காலி யில்,அமர்ந்து கொண்டான் அவன். - கோரஸ் போல எல்லாப் பையன்களும் ஒரே சமயத்தில் ஒரேவிதமான வேண்டுகோளை அவனிடம் விடுத்தனர். - 'ஏதாவது நல்ல கதையாச் சொல்லுங்க சார், கேட் கிறோம். r : * - - சாதாரணமாக மாரல் இன்ஸ்ட்ரக்ஷன், ஹாபி, இன் னொருவர் வராததை நிறைவு செய்வதற்குப் போகும் பாட வேளைகள், எல்லாவற்றிலும் பையன்களுடைய முதல் வேண்டுகோள் கதை சொல்லச் சொல்லித்தான் வருகிறது. இது ஏன் என்று தெரியவில்ல்ை. பையன்களுக்கு எதனால் இவ்வளவு பெரிய கதைப் பைத்தியம் பிடித்திருக்கிறது? ஒரு வேளை முழுப் பாடத் திட்டமும் ஒரு மாணவனை அல்லது முழு மாணவ சமூகத்தையும் அலுப்படையச் செய்வ தாகவோ, களைப்பூட்டுவதாகவோ, இருக்கிறதோ என்னவோ? அதிலிருந்து விடுபடுவதற்குத்தான் கதை கதை என்று கேட்கிறார்களோ? - ‘. . "'கதை இருக்கட்டும். உங்க செலபஸ் எந்த அளவிலே இருக்கு? பரீட்சைக்கு நடக்க வேண்டிய பாடமாவது முடிஞ் சிருக்கா, இல்லியா!' - "எப்பிடி 学frrf முடியும்? - இங்கிலீஷ் கிளாஸ் எச்.எம். எடுத்தாலும் எடுத்தார்...முக்கால்வாசி நாள் அவராலே எங்க கிளாஸுக்கு வர முடியாமப் போகுது. உங்களை மாதிரி யாராவ்து ஸ்ப்டிடியூட்தான் வராங்க...",