158 பொய்ம் முகங்கள் 'நீங்க ரொம்ப விரக்தியா இருக்கீங்க... பிழைக்க வழி சொன்னாலும் கேக்க மாட்டேங்கlங்க...!!’ என்றார் பொன்னழகு. . . - - - - 19 'நியாயவாதியாயிருப்பதே விரக்திக்கு அடையாளம் என்று அவசரமாகத் தீர்ப்புச் சொல்லிவிடும் அளவுக்குச் சமூகமும் மனிதர்களும் இன்று மரத்துப் போயிருக்கிறார் கள் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. தவறுகளைச் செய்தோ, பிழைகளைப் புரிந்தோ எப்படியாவது முண்டிபடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து பணம் சம்பாதிப்பது தான் விரக்தியற்ற நிலை என்று பொன்னழகு கருதுவது போல் அவன் பேச்சு இருந்தது. ஏழையின் வேதாந்தம் எங்கும் எடுபடுவதில்லை. வேதாந்தம் பேசவும் கார், பங்களா, பணம், பதவி எல்லாம் செளகரியமாக இருந்தால் தான் அதைக் கேட்கவும், நம்பவும், மதிக்கவும் ஆட்கள் இருப்பார்கள். திருவோடு ஏந்தும் சாமியாரைச் சந்நியாளி யாக ஏற்றுக் கொள்வதைவிட இம்பாலா காரில் காவி உடையோடு வந்து இறங்கி, "பிரின்ஸிபில்ஸ் ஆஃப் யோகா என்று தலைப்பிட்டுக் கொண்டு பேசுகிற: லக்சூரியஸ் யோகிக்குத்தான் இன்று மதிப்பு என்று. தெரிந்தது. தன்னுடைய நியாயவாதம் எடுபடாதது ஏன் என்று சுதர்சனனுக்கே புரிந்தது. இருந்த வேலையையும் விட்டுவிட்டுப் புதிய வேலையைத் தேடிப் பட்டினத்துக்கு. வந்த இடத்திலே தன்னை யார் எப்படி மதிப்பார்கள்?' சுதர்சனன் பொன்னழகை நோக்கி வினவினான்: - "நிஜத்தைப் பேசினாலே அதை விரக்தின்னு சொல் .lங்க பொன்னழகண்ணே! 'பிழைக்க வழிங்கிற தமிழ். வார்த்தைக்குப் பிழை செய்வதற்கு வழின்னும் அர்த்தம், தவறு செய்வதற்கு வழின்னும் அதுக்கே இன்னொரு வித.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/160
Appearance