பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 虚57 திலே வேலையை விட்டுட்டேங்கிறீங்க. பேசாமல் இப்பவே எங்கூட வாங்க... நம்ப மந்திரி அண்ணன் கிட்டக்கூட்டிக் கிட்டு போயிக் கழக முன்னணிப் பேச்சாளர்னு உங்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கச் சொல்லி மாசத் துக்கு ஏழு எட்டுக் கூட்டம் ஏற்பாடு பண்ணி ஒரு கூட்டத் துக்கு முந்நூறு ரூவா தரச் சொல்றேன். சுலபமா மாசம் ஒண்னுக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் உங்களுக்குக் கிடைச்சிடும். அதுக்கப்புறம் தோழர் சுதர்சனனார் கார் வழங்குநிதி"ன்னு அறிக்கைவிட்டு வசூல் பண்ணுவோம். ஆறு மாசத்திலே ஒரு புதுக்கார்ையும் நீங்க வாங்கிக்கலாம். இனிமே ஒருத்தன் கிட்டக் கைகட்டிச் சேவகம் பண்ண வேணாம் நீங்க!... என்ன சொல் lங்க: தயாரா?...உ.ம்.ணு ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்பவே இட்டுக்கிட்டுப் போயி அண்ணன்கிட்டச் சொல்லிடலாம்...' - "சுயமரியாதை இயக் கத் தி லே நான் வந்து சேர்ந்தப்போ அரசியல்-சமூக சேவை எல்லாமே பொதுத் தொண்டுகளாகப் பிரதிபலன் கருதாத சேவைகளாக இருந்திச்சு அண்ணே, இப்போ அதுவும் ஒரு தொழிலாகிச் சம்பாதிக்க முடியுதுன்னு நீங்களே சொல்றீங்க. கேட்க அசிங்கமா இருக்கு. நான் அதுக்கு ஆளில்லே! நாளாக நாளாகப் பொது ஜன சேவைக்குன்னு தொடங்கின எல்லா நல்ல இயக்கமும் பிள்ளையார் பிடிக்கக் குரங்கானாற் போல ஆயிடிச்சு. எல்லாப் பொதுநல இயக்கத்திலேயும்-வேறே வேலையே இல்லாத சோம்பேறி .கள், ரெளடிகள், வேறு எதற்கும் கையாலாகாதவர்கள். இடைத்தரகர்கள், லாயக்கில்லாதவர்களெல்லாம் வந்து திரம்பிட்டாங்கங்கிறதுதான் என் அபிப்பிராயம். இதோ எதிரே மேடைக்கு மேலே நடக்குதே ஒரு விழா-அதுவே இதுக்குச் சரியான உதாரணம். சாதனைகளை மறந்துவிட்டு மனிதர்களை முகஸ்துதி செய்து மாலை பேர்ட்டுத் தமுக்கடித்தே நாம் காலங்கடத்திக் கொண்டிருக்கிறோமே தவிர உழைப்பிலும் உண்மையிலும் நமக்கு நம்பிக்கை போயிடிச்சு...?" -- 3.