நா. பார்த் தசாரதி 193 சில்லறைத் தேவதைகளுக்குச் சில்லறையாகக் காணிக்கை செலுத்தினாலொழிய மூலஸ்தானத்தில் போய்த் தரிசனம் பண்ண முடியாது சார்." - "புரிகிறது! இது கூடப் புரியாதா என்ன?' என்றார். வந்தவர். சுதர்சனன் குறுக்கிட்டுக் கேட்டான்:- - சுதந்திரம் வந்து முப்பது வருசமான பின்னாலும் இந்த சம்திங்' போகலியே; சம்திங்" இனாம், இலஞ்சம். எல்லாம் ஒரு மரபாகவே ஆகிவிட்டனவே!" - -இனாம் வேறே; லஞ்சம் வேறே. ஏதோ உள்ளே விடறதுக்காக வாட்ச்மேன், பியூனுக்கு ஒண்ணு ரெண்டு கொடுக்கிறது லஞ்சமாயிடாது'- & "கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் ಇ67®ತಃ கிறது லஞ்சமாயிடாது’ "கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக் கிறது இனாம் அல்லது சம்திங்'. அதிகச் சம்பளம் வாங்கற வனுக்குக் கொடுக்கிறது லஞ்சம். ஊரறிய மேடையி லேயே சொல்லி ஒதியிடறது போலப் பண்டமாக். கொடுத்துடறது அன்பளிப்பு இல்லியா சிண்டிகேட் சார்?' "அட சும்மா இரும் ஐயா! நீர் ஒரு வம்புக்கார ஆளா யிருப்பீர் போல இருக்கே.-என்று பாதி வேடிக்கையும். பாதி கண்டிப்பும் கலந்த குரலில் சுதர்சனனை நோக்கிச் சொல்லியபடி அவன் முதுகில் சற்று அழுத்தமாகவே தட்டினார் சிண்டிகேட் சிதம்பரநாதன். . . . 25 சிண்டிகேட் சிதம்பரநாதனின் அந்தக் கை தன் முதுகில் பட்டதற்காக அருவருப்பு அடைந்தவன்போல் சற்றே விலகி நின்றான் சுதர்சனன். சிண்டிகேட் சிரித்த: படியே சொன்னார்:
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/195
Appearance