உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பொய்ம் முகங்கள் பதவிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். மாணவர். களுக்கு அறிவூட்டுவதைவிட அவர்களைப் பாஸ் பண்ணி விடும் ஏற்பாடுகளைத்தான் தனிப் பயிற்சிக் கல்லூரிகள் செய்து கொண்டிருந்தன. அதற்காகப் பல்கலைக் கழகங். களுக்கும் தனிப் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நடுவே இடைத் தரகு வேலை செய்து மருத்துவச்சி உத்தியோகம் பார்த்துப் பெற்றுக் கொடுப்பதற்கச் சிண்டிகேட் சிதம்பரநாதன் போன்றவர்கள் இருந்தார்கள். சென்னைக்கு வந்த பின் கல்வித்துறை, பள்ளிகள், சர்வகலாசாலைகள் மேல் மரியாதை குறைந்து அருவ்ருப்பு ஏற்பட்டது சுதர்சன் னுக்கு. இயல்பான ஞான வளர்ச்சிக்கும், விவேகத்துக்கும் நமது கல்விக்கூடங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சுதர். சனனுக்குத் தோன்றியது. கல்விக்கூடங்களும் சர்வகலா சாலைகளும் நாடு முழுதும் வருடந் தவறாமல் டயம்டேபிள் போட்டுக் கொண்டு திட்டமிட்டுத் துவேஷத்தையும், ஜாதி வெறியையும், போட்டி பொறாமைகளையும் முடிவாக இணையற்ற விதத்தில் அஞ்ஞானத்தையும், அவித்தையும். மந்தபுத்தியையும் வளர்த்து வருவதாகப்பட்டது. - ஒரு சமயம் எம். ஏ. பட்டதாரி ஒருவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் வேலை கிடைக்கவில்லை என்று வருத். தப்பட்டு ரகுவைத் தேடி வந்து ஏதாவது உத்தியோகம் கிடைக்க வழி செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண் டிருந்தார். வழக்கம்போல் ரகு சிண்டிகேட் சிதம்பர் நாதனுக்கு ஃபோன் பண்ணினான். அப்போது உடனருந்த சுதர்சனன் வேலை தேடி வந்த வரிடம் சொன்னான் : - 'தெரியாத்தனமா நீங்க எம். ஏ. முதல் வகுப்பிலே முதல் வரிசையிலே பாஸ்பண்ணித் தொல்ைச்சிட்டீங்க. அதனாலே உங்களுக்கு ஒண்னும் பண்றத்துக்கில்லே மூன்றாம் வகுப்பிலே பாஸ் பண்ணியிருந்தாலாவது உங்களை எந்த யூனிவர்ஸிடிக்காவது வைஸ் சான்ஸ்லராப் போடச் சொல்லலாம். எஸ். எஸ். எல். ஸி. பெயிலாயிருந்