பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 20 I. திங்கன்னா எலெக்ஷனுக்கு நின்னு கல்வி மந்திரியா வரலாம். மூன்றாவது ஃபாரம் பெயிலாகியிருந்திங்கன்னா ஒரு கட்சித் தலைவரா வந்து கல்வி மந்திரி மாதிரிப் பல மந்திரிங் களையே ஆட்டிப் படைக்கலாம். நீங்க பாவம்...விவரம் தெரியாம எம். ஏ. ஃபர்ஸ்ட் ராங்க்லே பாஸ் பண்ணி வச்சி ருக்கீங்க. இப்பல்லாம் காலேஜ்லே லெக்சரா வரணும்னாக் கூட பி.எச்.டி. வேணும்னு கேட்கிறாங்க. ஆனா அதே சமயத்திலே பி.ஏ.பி.டி. படிச்சவங்களை யூனிவர்ஸிடி வைஸ்-சான்ஸ்லராவே போட்டுடறாங்க." "சுதர்சனன்! போதும்ப்பா...நிறுத்து. நீ தயவு செய்து இங்கே உட்கார்ந்து இப்பிடி எல்லாம் பேசதே. யாராவது என்னைப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க... . என்றான் ரகு. அவன் குரலில் பயமும் பதற்றமும் தெரிந்தது. - "கவலைப்படாதே? இதுனாலே உனக்கு ஒரு கெடுத லும் வராது ரகு யாராவது கேட்டாங்கன்னா, "என் ஃப்ரண்டு ஒரு லூஸ்.ஃப்ரஸ்ட்ரேடட் ஃபெல்லோ...ஏதாச். சும் இப்படித்தான் அர்த்தமில்லாம உளறிக்கிட்டிருப் பான்’னு சொல்லிச் சமாளிச்சுக்கோ' என்று சிரித்துக் கொண்டே ரகுவுக்குப் பதில் சொன்னான் சுதர்சனன். ஆனால் வேலை தேடி வந்து கஷ்டப்பட்ட பட்டதாரிக் குச் சுதர்சனன் பேச்சும் அதிலிருந்த கசப்பான நியாயமும் பிடித்திருந்தது. "நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரிங்க...இப்பல்லாம் ஒரு லெக்சராக வேலைக்கு அப்ளை பண்ணினாலே உனக்குப் .பி.எச்.டி. இருக்கான்னு தூண்டித் தூண்டிக் கேட்கிறாங்க. அதே சமயத்திலே வெறும் பி.ஏ.பி.டி.யை யூனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராவே போட்டுடறாங்க." "சின்ன வேலைக்குத்தான் தகுதி-திறமை-தரம் இதெல் லாம் கேட்டுத் தட்டிக் கழிப்பாங்க. மூவாயிரம் நாலாயிரம் மாதச் சம்பளம் வாங்கற பெரிய வேலையாப் பார்த்துத் தேடினிங்கன்னா அந்தத் தகுதி-திறமை-தரம் எல்லாம்.