பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் 1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந் நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளி யீடாகப் புத்தக வடிவில் வெளி வருகிறது. பா சாங் கு க ளு ம், போலித்தன்மைகளும் நிறைந்த மனிதர்கள் சமூகவாழ்வில் தென்படுகிற வரை அப்படி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும்-அவை நிஜத்துக்கு அப்பாற் பட்ட-நிஜத்தைவிட அதிகமான பொய்ம் முகங் களாகவும் இருக்கும். - . . . - அந்தப் பொய்ம் முகங்களைத் தேடி அடை யாளம் காணவும் காட்டவும் முயல்வது அதிகப் பிரசங்கித்தனம்’ என்று பழமைவாதிகள் நினைக் கலாம்-சொல்லலாம், அபிப்ராயப்படலாம்.

  • ஆனால் அப்படிப் பொய்ம் முகங்களை தேடி விலக்கி-மெய்யான தோற்றத்தைச்சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் காட்டும் அதிகப் பிரசங்கித் தனங்கள் இன்றைய இலக்கியத்துக்கும் நாளைய இலக்கியத்துக்கும் என்றைய இலக்கியத்துக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

இலக்கிய ஆசிரியனுடைய - முழுமையான கூரிய பார்வைக்கு எதுவும் தப்பமுடியாது-தப்பக் கூடாது. அந்தப் பார்வை கூர்மையாகவும் எந்த ஆழம் வரையானாலும் அந்த ஆழம்வரை பாய முடிந்ததாயும், இருப்பதுதான் அதன் சிறப்பு. அத்தனை கூரிய பார்வையில் எத்தனை பொய்ம் முகங்கள் கிழிபட முடிந்தாலும் நல்லது தான். பாசாங்குகள், வேஷங்கள், ஆஷாடபூதித் தனமான நாகுக்குப் போர்வைகள் எல்லாம் சுழன்