உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பொய்ம் முகங்கள் பிள்ளையிடம் நீட்டினார். அவரும் ஒப்புக்குக்கூட மறுக்கா மல் வாங்கிக் கொண்டார். காபியைக் குடித்து முடித்ததும், * சுதர்சனம்! வர ஞாயிற்றுக்கிழமை கும்மத்தம் பட்டியிலே ஒரு பட்டி மண்டபம், கண்ணகியின் கற்புச் சிறந்ததா, மாதவியின் கற்புச் சிறந்ததா. கோப்பெருந்தேவியின் கற்புச் சிறந்ததா? என்று தலைப்புக் கொடுத்திருக்கேன், நீர் ஏதா வது ஒரு கட்சிக்குத் தலைமை வகிக்கிறதா இருந்தா,எழுதிக் ஒறேன். என்ன சொல்றீர்?" என்று கேட்டார். பிச்சாண் டியா பிள்ளை அப்பகுதியில் பட்டி மண்டபப் புலி. பட்டி மண்டப ஏஜெண்ட். - இதற்கு சுதர்சனன் உடனே பதில் சொல்லவில்லை. தமிழ்க்கல்லூரி நாட்களிலும் அதன் பின்பும் நிறைய பட்டி மன்றங்கள், கவியரங்கங்களில் கலந்து கொண்டிருந்த அவனுக்கு இப்போதெல்லாம் அவற்றின்மேல் எரிச்சலும் சலிப்பும் வந்திருந்தது. . . . . கணித ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்களுக்கு டியூஷன் எப்படி ஓர் உபதொழிலாகி இருந்ததோ அப்படித் தமிழாசிரியர்களுக்குப் பட்டிமன்றமும், கவியரங்கங்களும் மெல்ல மெல்ல உபதொழிலாகிவிட்டிருந்தன. காப்பியங் களும், புராணங்களும் பட்டி மண்டபத்தில் விவாதிக்கவே எழுதப்பட்டாற்போன்ற பிரமையைப் பாமர மக்களிடம் பரப்ப இந்த விவாத மன்றங்கள் உதவின. நாயனகோஷ்டி, நாட்டியக் குழு, சங்கீத பார்ட்டி, நாடகயூனிட் போலப் பட்டிமண்டப யூனிட்டுகள் ஊரூராக ஏற்பட்டிருந்தன. ...” புலவர் பிச்சாண்டியாபிள்ளை லெட், வித்வான் வீரரர்கவன் ளெட் என்று பட்டிமண்டப ஸ்ெட்கள் சேர்ந்திருந்தன. ஒரே விஷயங்களை வேறு வேறு இடங்களில் மாற்றி மாற்றி சத்தம் போட்டு மக்களைக் கூட்ட் முடிந்தது. கிளாஸிகல் ரிவைவலிஸம் போல் இதையும் ஒரு பெயரில் அழைத்துக் கிண்டல் செய்யவேண்டும் போலிருந்தது. சுதர்சன்னுக்கு. .பிச்சாண்டியா பிள்ளை விடவில்லை.