நா. பார்த்தசார்தி 67 அதெப்படி? நேரே கண்டு கேட்டுப் போடணும்னு தானே காரைப் போட்டுக்கிட்டு வேலை மெனக்கெட்டு இங்கே ஒடியாந்தேன் நான்.' 'நீங்க எப்படிக் கேட்பீங்களோ அப்பிடியே கடுமையா உங்க சார்பிலே நான் கேட்டுடறேன் கவுண்டர் சார்! அவர் ஏதாவது கிளாஸ்லே இருப்பாரு. கிளாஸ் நடத்திக்கொண் டிருக்கிறபோது ஒரு வாத்தியாரை நான் இங்கே கூப்பிட் டனுப்பறது. நன்னா இருக்காது பாருங்கோ. கவுண்டர் சிறிது சமாதானம் அடைந்தவராகக் காணப் பட்டார். அவரை விரைந்து விடை கொடுத்து அனுப்பி விட முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர். அந்த நேரத்தில் ரைட்டர் ரூமிலிருந்து சாக்பீஸ் கட்டி எடுத்துக் கொள்வதற்காகச் சுதர்சனனே அங்கே தற்செயலாக வந்து சேர்ந்தான். ஒரு கணம் தலைமையாசிரியர் அவனைப் பார்த்துப் பதற்றமடைந்தார். 6 தலைமையாசிரியர் பதற்றமடைந்ததுபோல் எதுவும் அப்போது அங்கு நடந்து விடவில்லை. காரணம் கவுண்டர் தமிழாசிரியர் சுதர்சனனை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர் அப்போதிருந்த ஆத்திர மனநிலையில், இவர்தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் புதுத் தமிழ் வாத்தியார் சுதர்சனன்-என்று அவருக்குச் சுதர்சனனை அறிமுகப் படுத்துகிற துணிவும் அங்கிருந்த யாருக்கும் கிடையாது. இந்தச் சூழ்நிலை தலைமையாசிரியர் வாசுதேவனுக்கு வசதியாகப் போயிற்று. எதுவுமே நடக்காததுபோல், வாங்க போகலாம்'-என்று கவுண்டரை அவரது கார் வரை அழைத்துச் சென்று கதவைகூடத் தன் கையாலேயே திறந்துவிட்டு உள்ளே ஏறிக்கொள்ளச் செய்தபின் திரும்பத்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/69
Appearance