உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

யணிந்த தலே மயிரையும் பார்ப்பார்களாதலின் பொலிய" என்ருர்)

உங்களுடன் வரும் விறலிக்கும் அவன் பரிசில் தரு வான். நூலில் கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையும் உடைய பொன்னர் மாலையை வெள்ளிதாகிய ஒளியை யுடைய பாடினி சூட வழங்கு வான். -

நூலின் வலவா நுணங்களில் மாலே வால்ஒளி முத்தமொடு பாடினி அணிய.

நூலால் கட்டாத நுட்பமாகிய ஒன்றைேடு ஒன்று பிணேந்துள்ள பொன்னரி மாலையை, வெண்மையான ஒளியையுடைய முத்துக்களோடு விறலி அணியும்படி,

நூலால் கட்டாமல் பொன்னரியினலே கட்டப்பெற்ற மையின், நூலின் வலவா’ என்ருர், வலத்தல் - கட்டுதல். நுணங்கு - நுட்பமான. அரில் - ஒன்றனோடு ஒன்று இணைந்தது. வால் ஒளி - வெள் ஒளி. பாடினி . விறலி.)

பிறகு பொருநனுக்கு விடை கொடுத்தனுப்புகிருன். அப்போது அவன் செய்ததைச் சொல்கிருன் பொருநன்.

எங்களே.ஒரு தேர்லே ஏற்றி அனுப்பின்ை. அந்தத் தேர் யானைக் கொம்பால் செய்தது. முன்னலே கையில்ை பீடிப்பதற்குத் தாமரை மொட்டைப் போன்ற கொடுஞ் சியை உடையது. உயரமான தேர். அதில் பூட்டிய குதிரைகள் வெள்ளேவெளேரென்று பாலைப் போல இருந் தன. சாதிலிங்கம் ஊட்டின தலே மயிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசைய இருந்த அத்தகைய குதிரைகள் கான்கை

அந்தத் தேரில் புட்டின்ை.