பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்களின் பதிவமைப்பை அகராதியியல் நோக்கில - அமைக்க ஆலோசனை வழங்கிய தொகுப்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் பெ. மாதையன் அவர்களுக்கும் மெய்ப்புத் திருத்தப்பணியில் முழு ஒத்துழைப்பு நல்கிய அறிவியல் களஞ்சிய ஆய்வு உதவியாளர்கள் முனைவர் அர. கமல தியாகராசன், பொறிஞர் (செல்வி) இரா. இந்து ஆகியோருக்கும் நன்றி. கலைச்சொல் அகராதிகள் அனைத்தும் அச்சிட நிதியுதவி நல்கிய தமிழக அரசுக்கும், அந்த நல்கையைப் பெற்றிட முயற்சி மேற்கொண்ட மாண்பமை துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறுவது என் கடமையாகும். 'இந்நூலை நன்முறையில் ஒளியச்சுக் கோர்ப்பு செய்த சென்னை சுவிதா கம்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கும், அதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்த முனைவர் தெய்வசுந்தரம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்நூலைச் சிறந்த முறையில் பதிப்பித்த தமிழ்ப் பல்கலைக்கழக அச்சகத்தினருக்கும், பதிப்புத்துறையினருக்கும் நன்றி. அன்புடன், இராம. சுந்தரம், பேராசிரியர் & தலைவர், அறிவியல் தமிழ் & தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 5. .